"கொஞ்சம் லிப்ஸ்டிக்... நெறையா ஸ்மைல்.." - நீலிமா ராணி வெளியிட்ட போட்டோஸ் - ஹார்ட்டின்களை பறக்கவிடும் நெட்டிசன்கள்..!
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, சினிமாவில் குணச்சித்திர நடிகை, சீரியல்களில் முக்கிய கதாபாத்திரங்கள் என தொடர்ச்சியாக நடிப்பில் கலக்கி வரும் நீலிமா ராணியின் சமீபத்திய அவதாரம் தயாரிப்பாளர்.
“வாணி ராணி, தாமரை, தலையணை பூக்கள்” ஆகிய சீரியல்களில் நடித்துக்கொண்டே “ஜீ தமிழ்” தொலைக்காட்சியில் “நிறம் மாறாத பூக்கள்” சீரியலை நீலிமா ராணி தனது இசை பிக்சர்ஸ் மூலமாகத் தயாரித்து வருகிறார்.தமிழ் சினிமாவில் “தேவர்மகன்” என்ற படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை நீலிமா ராணி.
இதனை தொடர்ந்து அவர் “விரும்புகிறேன், தம், மொழி ராஜாதிராஜா, சந்தோஷ் சுப்பிரமணியம், நான் மகான் அல்ல” போன்ற பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
வில்லி கதாபாத்திரங்களில் சதா முறைத்து கொண்டு பார்க்கவே பயமுறுத்தும் முகபாவனைகளுடன் இவரை பார்த்து பழகி விட்ட நிலையில், நாயகிகளுக்கு இணையாக கொஞ்சம் க-வர்ச்சியும் சேர்த்து சமீப காலமாக போட்டோ ஷூட் நடத்தி இளசுகளை கிறங்கடித்து வந்தார்.
நடிப்பில் இருந்து விலகி தயாரிப்பாளர் அவதாரம் எடுத்துள்ள இவர் தன்னுடைய சொந்த தயாரிப்பு நிறுவனம் மூலம் சீரியல்கள் மற்றும் வெப் சீரிஸ்கள் ஆகியவற்றை தயாரித்து வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், "கொஞ்சம் லிப்ஸ்டிக்... நெறையா ஸ்மைல்.." என்று கூறி சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள் ஹார்ட்டின்களை பறக்க விட்டு வருகிறார்கள்.
"கொஞ்சம் லிப்ஸ்டிக்... நெறையா ஸ்மைல்.." - நீலிமா ராணி வெளியிட்ட போட்டோஸ் - ஹார்ட்டின்களை பறக்கவிடும் நெட்டிசன்கள்..!
Reviewed by Tamizhakam
on
July 12, 2020
Rating:
