முன்னணி நடிகைகள் நடிக்க தயங்கும் கதாபாத்திரத்தில் நடிக்க தில்லாக ஒப்புக்கொண்ட சமந்தா..!


ஊரடங்கு காரணமாக திரைப்படங்கள் பெரிய அளவில் வெளியாகாததால் சமீபகாலமாக வெப் சீரிஸ்களுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

அதனால் பல முன்னணி நட்சத்திரங்களும் வெப் சீரிஸ்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்தவகையில் ஒடிடியில் ஏற்கனவே வெளியாகி வெற்றிபெற்ற 'தி பேமிலி மேன்' என்கிற வெப் சீரிஸின் இரண்டாவது சீசனில் நடித்துள்ளார் சமந்தா.

மனோஜ் பாஜ்பாய், பிரியாமணி நடித்திருந்த முதல் சீசன், சாதாரண மனிதன் வேடத்தில் உலாவரும் ஒரு உளவாளி பற்றிய கதையாக உருவாகி இருந்தது. இதன் 2வது சீசனில் தான் நடிகை சமந்தா நடித்துள்ளார்.

முற்றிலும் புதிய ஒரு கேரக்டரில் சமந்தா நடித்துள்ளார் என்று சொல்லப்பட்ட நிலையில் தற்போது இவர் தீவிரவாத கும்பல் ஒன்றின் ஸ்லீப்பர் செல் ஏஜெண்ட் கதாபாத்திரத்தில் தான் நடித்துள்ளார் என தெரிய வந்துள்ளது.

முதலில் தீவிரவாதியாக நடிப்பதா என தயங்கினாலும் அவரது கதாபாத்திரத்திற்கு சொல்லப்பட்ட வலுவான பின்னணி கதையை கேட்டுத்தான் இந்த வெப் சீரிஸில் நடிக்கக ஒப்புக்கொண்டாராம் சமந்தா.

பொதுவாக நடிகர், நடிகைகள் இதுபோன்ற கதாபாத்திரங்களில் நடிக்க தயங்குவார்கள். ஆனால், சமந்தா துணிந்து நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார். மேலும், வெப் சீரிஸ் ரசிகர்கள் இயக்குனர்களிடம் இருந்து அதிகம் எதிர்பார்கிறார்கள்.

சினிமா என்றால் சென்சார், அது, இது, என ஆயிரத்தெட்டு விஷயங்களை தாண்டி வர வேண்டும். இதனால், ஒவ்வொரு காட்சியின் போதும் தணிக்கை குழுவை மனதில் வைத்தே இயக்க வேண்டும். ஆனால், வெப்சீரிஸ்களில் அந்த பிரச்சனையே இல்லை. சொல்ல வந்த விஷயத்தை அப்படியே சொல்லலாம் என்பதால் இயக்குனர்கள் இறங்கி அடிகிறார்கள்.

ஆனால், தற்போதைக்கு இந்திய வெப் சீரிஸ்களில் பதினெட்டு வயதிற்கு மேற்பட்டோர் பார்க்கும் ரகமாக தான் வந்து கொண்டிருகின்றன என்பது குறிப்பிடதக்கது.

முன்னணி நடிகைகள் நடிக்க தயங்கும் கதாபாத்திரத்தில் நடிக்க தில்லாக ஒப்புக்கொண்ட சமந்தா..! முன்னணி நடிகைகள் நடிக்க தயங்கும் கதாபாத்திரத்தில் நடிக்க தில்லாக ஒப்புக்கொண்ட சமந்தா..! Reviewed by Tamizhakam on July 22, 2020 Rating: 5
Powered by Blogger.