விஜய், ரஜினிகாந்த் ஆகியோரை மோசமாக அடையாளப்படுத்திய மீராமிதுன் - விளாசி தள்ளும் ரசிகர்கள்..!


இப்படியெல்லாமா ஒரு நடிகை வரம்பு மீறி பேசுவார்..? நிஜமாகவே புத்தி சுவாதினதுடன் தான் இருக்கிறாரா..? என்று கேட்கும் அளவுக்கு இருக்கிறார் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான மீரா மிதுன் என்ற நடிகை செய்யும் செயல்கள்.

தமிழில் ஓரிரு படங்களில் மட்டுமே நடித்துள்ள நடிகை மீரா மிதுன், தன்னை மிகப்பெரிய நட்சத்திரமாக நினைத்துக் கொண்டு, தங்கள் உழைப்பாலும், திறமையாலும் உச்சத்தில் இருக்கும் பல நடிகர், நடிகைகளை பற்றி சமூகவலைதளங்களில் ஏதாவது பதிவிட்டு வம்பிழுப்பதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்.

சமீபத்தில், இவரை மோசமாக மார்ஃபிங் செய்து சில ஆசாமிகள் வெளியிட்ட புகைப்படம் மற்றும் வீடியோக்களை ஏதோ விருது வாங்கியதை போல தனது\
 சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டார்.

சில நாட்களுக்கு, நடிகை த்ரிஷா தன்னை காப்பியடிப்பதை நிறுத்திக் கொள்ளாவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்து சர்ச்சையை கிளப்பினார் மீரா.தற்போது அவர் நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் விஜய்யை வம்பிழுத்து டிவீட் செய்துள்ளார்.

அதில், "தமிழ்நாடு நாசமாகிக் கொண்டிருக்கிறது. நீங்கள் பத்திரமாக இருங்கள். நான் நல்ல சொகுசான இடத்தில் பாதுகாப்பாக தான் இருக்கிறேன்.

மோசமான அடையாளம்

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகர் ரஜினிகாந்தையும், பெரும் ரசிகர் வட்டம் கொண்ட நடிகர் விஜய்யை மோசமான முறையில் அடையாளபடுத்தியுள்ளார் மீரா மிதுன்.

ரஜினிகாந்தை கன்னடர் ரஜினிகாந்த் என்றும் மற்றும் நடிகர் விஜய்யை கிறிஸ்தவர் விஜய் என்றும் கூறி இருவரும் என் பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள்?!  என்றும் கூறியுள்ளார்.

சைபர் புல்லியிங் குறித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க நான் தயங்க மாட்டேன். கடவுள் பார்த்துக் கொண்டிருக்கிறார்", என புலம்பியுள்ளார் மீரா மிதுன். இதைப்பார்த்த ரஜினி மற்றும் விஜய் ரசிகர்கள் அவரை சரமாரியாக திட்டி வருகின்றனர்.

விஜய், ரஜினிகாந்த் ஆகியோரை மோசமாக அடையாளப்படுத்திய மீராமிதுன் - விளாசி தள்ளும் ரசிகர்கள்..! விஜய், ரஜினிகாந்த் ஆகியோரை மோசமாக அடையாளப்படுத்திய மீராமிதுன் - விளாசி தள்ளும் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on July 14, 2020 Rating: 5
Powered by Blogger.