வாயாடி நடிகையின் அடி மடியில் ஆப்படித்த முன்னணி நடிகை.! - இதனால் தான் சமூக வலைதளத்தை விட்டு ஓட்டமாம்..!


ச்சை.. என்று கூறும் அளவுக்கு தான் இருக்கிறது அந்த வாரிசு நடிகையின் தகராறு. மிகவும் தரம் கெட்ட குழாயடி சண்டையைவிட மோசமாக இருந்த காரணத்தினால் நம்முடைய பக்கத்திலும், தளத்திலும் அந்த விவகாரம் பற்றி எதுவும் எழுதவில்லை.

ஆனாலும், சமூக வலைதள பக்கங்கள் முதல் யூட்யூப் தொட்டு இப்போது டீவி மீடியா வரை சென்று விட்டது இந்த கண்றாவி விவகாரம். இப்போது இந்த விவகாரம் குறித்து எழுத காரணம் பெரிய நம்பர் நடிகை இதில் இன்வால்வ் ஆகி வாயாடி நடிகைக்கு அடித்த ஆப்பு தான். போற போக்குல ஒரு இடத்தில் நம்பர் நடிகையை இழுத்து போட்டு துவைத்து விட்டார் வாயாடி நடிகை.

இந்த வாயடி நடிகைக்கு வினையாக வந்தது இவரது மூன்றாவது திருமணம் தான். மூனாவதா...? இல்ல, நாலாவதா..? என்று ஆளுக்கொரு கணக்கு சொல்கிறார்கள். அது எதுக்கு நமக்கு எத்தனை கல்யாணம் வேணாலும் பண்ணிக்கிட்டு போகட்டும் நமக்கு என்ன வந்தது.

கல்யாணம் பண்ணோம், குடும்பத்தை நடத்துனோம் என இல்லாமல் தன்னுடைய அப்பாவை வெறுப்பேற்றுகிறேன் பேர்வழியில் லிப் லாக் முத்தமெல்லாம் கொடுத்து கல்யாணத்தை நடத்தி வீடியோ, புகைப்படம் என வெளியிட்டு அவரது சொந்த குடும்பத்தின் வயிற்றெரிச்சலை கொட்டிக்கொண்டார் வாயாடி நடிகை.

அந்த வயிற்தெரிச்சல் தான் அம்மணி இப்போது வாஷிங் மெஷினில் போட்ட துணி போல சுழன்று சுழன்று குமுறிக்கொண்டிருகின்றது. எந்தவொரு சமூக இடைவெளியும் இல்லாத அளவுக்கு கூட்டம் அலைமோத சமீபத்தில் பண்ண வீடியோவையும், புகைப்படங்களையும் வெளியிட்டு பலரது வெறுப்பை ஈஸியா அந்த நடிகை சம்பாதித்துக் கொண்டார்.

புதுசா கட்டிய கணவரின் விட்டு வைத்த விவாகரத்து தற்போது அவரது வாழ்வில் வில்லங்கமாக வந்து விடிந்து விட்டது. இந்த விவகாரத்தில், பஞ்சாயத்து நடிகை வேறு உள்ளே வந்து சின்னாபின்னமாகிப்போனர்.

இப்படி, தன்னுடைய அக்னி சிறகை விரித்து, சிங்கப்பெண்ணாக சீறிய வாயாடி நடிகை. யார் வந்தாலும், லெஃப்டு.. ரைட்டு வாங்குறேன்னு, தோனி போல பேட்டை எடுத்து எல்லா பக்கமும் சிக்ஸர் அடித்து வந்த அந்த வாயாடி நடிகை, திடீரென இந்த வம்பே வேண்டாம் என அந்த குறிப்பிட்ட சமூக வலைதளத்தில் இருந்து ஒரே ஓட்டமாக ஓடியே போய் விட்டார். இதற்கான காரணம் இதுதான் என தற்போது ஒரு பூதம் கிளம்பி இருக்கு.

ஆம், நம்பர் நடிகையை வம்பிற்கு இழுக்கவே. நம்பர் நடிகையின் தற்போதைய காதலன் எடுத்து சொருகிய ஆப்பு தான் காரணம் என்கிறார்கள். நம்பர் நடிகையின் காதலனும், இயக்குனருமான அவரது அம்மா காவல்துறையில் முக்கிய பொறுப்பில் இருக்கிறார். இதனால், அவரது குடும்பம் காவல்துறைக்கு மிகவும் நெருக்கம்.

இதனை பயன்படுத்தி, வாயடி நடிகையின் மேல் இருக்கும் பழைய கேசுகளை தூசு தட்டி ஆப்படிச்சுவிட்ருவோம் என்று பகிரங்கமாகவே கூறியுள்ளனர். உங்கள் பிரச்சனயை பார்த்துக்கொள்ளுங்கள். தேவையில்லாமல் எங்களை பற்றி பேசினால் விவாகாரம் ஆகிடும் என போட்டு கடாசியுள்ளனர்.

ஆத்தாடி, அடிமடியில கை வச்சிருவாங்க போல இருக்கே என செய்வதறியாது திகைத்து போன நடிகை சமூக வலைதளத்தில் இருந்து துண்டை காணோம் துணியை காணோம் என எகிறியுள்ளார்.

வாயாடி நடிகையின் அடி மடியில் ஆப்படித்த முன்னணி நடிகை.! - இதனால் தான் சமூக வலைதளத்தை விட்டு ஓட்டமாம்..! வாயாடி நடிகையின் அடி மடியில் ஆப்படித்த முன்னணி நடிகை.! - இதனால் தான் சமூக வலைதளத்தை விட்டு ஓட்டமாம்..! Reviewed by Tamizhakam on July 23, 2020 Rating: 5
Powered by Blogger.