மீசைய முறுக்கு நடிகை ஆத்மிகாவின் தந்தை மரணம் - கனத்த இதயத்துடன் அவர் பதிவிட்ட போஸ்ட்..!


ஹிப்ஹாப் தமிழா ஆதி கதாநாயகனாக நடித்த மீசைய முறுக்கு படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை ஆத்மிகா. அப்படம் வியாபாரரீதியாக வெற்றி பெற்றாலும் ஆத்மிகாவுக்கு தொடர்ந்து வாய்ப்புகள் அமையவில்லை. இருந்தாலும் மனம் தளராமல் ஏதேனும் வாய்ப்பு கிடைக்காத என்ற ஏக்கத்தில் கவர்ச்சி களத்தில் குதிக்க ஆரம்பித்தார்.

ஆரம்பத்தில் புசு புசுன்னு இருந்த இவர் கவர்ச்சியை காட்டவேண்டும் என்பதற்காகவே தனது உடல் எடையை பாதியாக குறைத்துவிட்டார். இதையடுத்து தனது சமூகவலைத்தளங்களில் அவ்வப்போது கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களின் கவனத்தை திசை திருப்பி வருகிறார்.

அந்தவகையில் தற்போது மிட்நைட்டில் துளி கூட மேக்கப் இல்லாமல் எண்ணெய் வடியும் முகத்துடன் எடுத்த அழகிய செல்பி வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். இந்த வீடியோவை,கடந்த மாதம் 23-ம் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.


அதற்கு பிறகு, கடந்த ஒரு வார காலமாக எந்த பதிவையும் அவர் பதிவு செய்ய வில்லை. இந்நிலையில், சற்று முன்பு, தன்னுடைய தந்தை கடந்த 26-ம் தேதி மாரடைப்பு காரணமாக இறந்து விட்டதை உருக்கத்துடன் தெரிவித்துள்ளார் ஆத்மிகா. இதனை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். மேலும், மறைந்த தனது அப்பாவை நினைந்து ஒரு பதிவையும் வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் உங்களை கடவுள் ஏன் இவ்வளவு சீக்கிரம் எடுத்துக்கொண்டார் என்று எனக்கு தெரியவே இல்லை. எப்படி என்னை விட்டு திடீரெனே மறைந்திர்கள். உங்களை நினைவில் கொள்ள என்னுடைய இதயம் தினமும் எனக்கு உதவி செய்யும். என்னுடைய வாழக்கையில் எவ்வளவோ கஷ்டங்களை சந்தித்திருக்கிறேன்.

அப்போதெல்லாம் நீங்கள் என்னுடன் இருந்தீர்கள். எனக்காக நின்றீர்கள். என்னை வலுவனவலாகவும், சுதந்திரமாகவும் வளர்த்தீர்கள். நான் சத்தியம் செய்கிறேன், என்னுடைய ஒவ்வொரு வளர்ச்சியிலும் உங்களை பெருமைபடுத்துவேன். நான் சத்தியம் செய்கிறேன் எனக்கு துன்பம் வரும் போதெல்லாம் புன்னகையுடன் கடப்பேன்.

நான் சத்தியம் செய்கிறேன் யார் என்ன சொன்னாலும் என்னை நான் நம்புவேன். நான் சத்தியம் செய்கிறேன். எல்லோரிடமும் நான் இனிமையாக நடந்து கொள்வேன். என மிகவும் உருக்கமாக கூறியுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் அவருக்கு அனுதாபங்களையும், நம்பிக்கையூட்டம் வார்த்தைகளையும் கூறி வருகிறார்கள்.

மீசைய முறுக்கு நடிகை ஆத்மிகாவின் தந்தை மரணம் - கனத்த இதயத்துடன் அவர் பதிவிட்ட போஸ்ட்..! மீசைய முறுக்கு நடிகை ஆத்மிகாவின் தந்தை மரணம் - கனத்த இதயத்துடன் அவர் பதிவிட்ட போஸ்ட்..! Reviewed by Tamizhakam on July 02, 2020 Rating: 5
Powered by Blogger.