"என்ன எழவு கன்றாவி இது..?" - நடிகை குஷ்பு வெளியிட்ட புகைப்படம் - ரசிகர்கள் உவ்வேக்..!


மும்பையை பூர்விகமாக கொண்ட நடிகை குஷ்பு, இந்தி படங்களின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். பின்னர் தென்னிந்திய சினிமாவில் கால்பதித்த அவர், தமிழில் வெற்றி கொடியை நாட்டினார்.

80, 90களில் தமிழ் சினிமாவின் டாப் நடிகைகளில் ஒருவராக வலம் வந்த குஷ்பு, ரஜினி, கமல், விஜயகாந்த், பிரபு, சத்யராஜ், சரத்குமார் என பலருடனும் ஜோடி போட்டுள்ளார்.பின்னர் இயக்குநர் சுந்தர் சியை திருமணம் செய்துக்கொண்டு தமிழ் நாட்டிலேயே செட்டிலான குஷ்பு, காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளராக உள்ளார்.

இப்போதும் டிவி, சீரியல், சினிமா என படு பிஸியாக உள்ளார் குஷ்பு. ஆனாலும் குடும்பத்தினருடனும் நேரத்தை கழித்து வாழ்க்கையை சரியாக பேலன்ஸ் செய்து வருகிறார்.தற்போது ரஜினிகாந்துடன் அண்ணாத்த படத்தில் நடித்து வரும் குஷ்பு, சமூக வலைதளங்களிலும் படு ஆக்டிவாக உள்ளார்.

அவ்வப்போது அரசியல் கருத்துக்களை பகிர்ந்து வரும் குஷ்பு, தனது கணவர் மீதான காதலையும் அடிக்கடி சமூக வலைதளம் மூலம் வெளிப்படுத்தி வருகிறார்.

இந்நிலையில், பேஸ் ஆப் மூலம் தன்னுடைய முகத்தை ஆண் போல மாற்றி அதனை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் அம்மணி. இதனை பார்த்த ரசிகர்கள், அஜித் மாதிரி இருக்கீங்க.. அமீர் கான் மாதிரி இருக்கீங்க.. ராகுல் காந்தி மாதிரி இருக்கீங்க என்று கூறி வருகிறார்கள்.


சில வலைவாசிகள் என்ன எழவு கன்றாவி இது.. குஷ்பு அங்கிள் என்று கலாய் கருத்துகளை வெளியிட்டு வருகிறார்கள்.

"என்ன எழவு கன்றாவி இது..?" - நடிகை குஷ்பு வெளியிட்ட புகைப்படம் - ரசிகர்கள் உவ்வேக்..! "என்ன எழவு கன்றாவி இது..?" - நடிகை குஷ்பு வெளியிட்ட புகைப்படம் - ரசிகர்கள் உவ்வேக்..! Reviewed by Tamizhakam on July 21, 2020 Rating: 5
Powered by Blogger.