அப்பாவை கடுப்பேற்றுகிறேன் பேர்வழியில் தனக்கு தானே ஆப்பு அடித்து கொண்ட நடிகை..!


அம்மாடியோவ்.. இதெல்லாம் பொண்ணா .. என்று கேட்கும் அளவுக்கு இருக்கிறது அந்த நடிகையின் சமீபத்திய நடவடிக்கைகள். வயதோ 40,.. ஆனால், செய்வதெல்லாம் 25 வயது பெண் போல தான். தோளுக்கு மேல் வளர்ந்த பெண்ணை வைத்துக்கொண்டு மூன்றாவதாக ஒரு நபரை திருமணம் செய்து கொண்டார் அம்மணி.

இதெல்லாம், சகஜமப்பா என்று கடந்து விட்டு போய்விடலாம் தான். ஆனால், தன்னுடைய வாழ்க்கையும் தன் குழந்தைகளின் வாழ்கையும் சிறக்க வேண்டும் என்று ஒரு நபரை தேர்வு செய்து, அவரை பற்றி நன்கு ஆராய்ந்து, சில பல இடங்களில் விசாரித்து திருமணம் செய்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

ஆனால், தன்னுடைய அப்பாவை கடுப்பேற்ற வேண்டும் என்று வம்படியாக மாற்று மதத்தை சேர்ந்த நபர் ஒருவரை அவசர அவசரமாக திருமணம் செய்து கொண்டிருக்கிறார். அதிலும், அவருடைய அப்பாவின் திருமண நாள் அன்றே. ஒவ்வொரு திருமண நாள் வரும் போதும் அவரது அப்பா இதை நினைத்து கடுப்பாக வேண்டுமாம்... இதெல்லாம் யாருடைய வாழ்கையை பாதிக்கும்.. அவருடைய அப்பாவுடைய வாழ்க்கையா..? இல்லை, அந்த நடிகையின் வாழ்கையை தான்.

இப்படி அவசர, அவசரமாக திருமணம் செய்து தனக்கு தானே ஆப்பு அடித்துக்கொண்டிருக்கிறார் அந்த நடிகை. அவர் ஏற்கனவே திருமணம் ஆனவர் என்பது ஒரு பக்கம் இருக்க, இப்போது தான் தெரிகிறது ஆள் பயங்கர தண்ணி வண்டி என்பதும் வுமனைசர் என்பதும்.

வாழ்க்கை எனும் பேருந்தில் எரிய அவர் ஒவ்வொரு பஸ்டாப்பிலும் இறங்கி ஏறியுள்ளார். இப்படி கல்யாணம் ஆன ரெண்டாவது நாளில் இருந்தே இப்படி பிரச்சனை வருகிறதே என்று அழுது புலம்புகிறார் அம்மணி.  அதுவும், அவரது சோசியல் மீடியா கணக்குகளில் நேரலையில் வந்து அழுகிறார்.

ஏன்..? எதற்கு..? இந்த அவசரம்.. யாரோ ஒருவரை கடுப்பேற்ற சொந்த வாழ்கையை யாரவது பணயம் வைப்பார்களா..? என்று கூறி வருகிறார் அவரது நலம் விரும்பிகள் மற்றும் ரசிகர்கள்.

அதனால.. கல்யாணம் என்பது ஆயிரம் காலத்தி பயிர் என்பதை உணர்ந்து நிறுத்தி நிதானமாக செயல்களை செய்ய வேண்டும்.. திருமணம் செய்ய சில நிமிடங்கள் போதும் அதன் பிறகு இருக்கும் வாழ்க்கை மிகவும் நெடிய பயணம் என்பதை இன்றைய இளைஞர்கள் உணர்ந்து செயல்பட்டால் வாழ்வு சிறக்கும்.

அப்பாவை கடுப்பேற்றுகிறேன் பேர்வழியில் தனக்கு தானே ஆப்பு அடித்து கொண்ட நடிகை..! அப்பாவை கடுப்பேற்றுகிறேன் பேர்வழியில் தனக்கு தானே ஆப்பு அடித்து கொண்ட நடிகை..! Reviewed by Tamizhakam on July 01, 2020 Rating: 5
Powered by Blogger.