"துப்பாக்கி" படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்கவிருந்தது யாருன்னு தெரிஞ்சா தூக்கி வாரி போட்ரும்..!


அழகிய தமிழ்மகன், குருவி, வில்லு, வேட்டைக்காரன், சுறா, வேலாயுதம் என அடுத்தடுத்து ப்ளாப் படங்களை கொடுத்து தடுமாறிக்கொண்டிருந்தார் நடிகர் விஜய்க்கு, கொலை பசியில் இருந்தவனுக்கு கிடைத்த பிரியாணி போல வந்தது தான் முருகதாசின் "துப்பாக்கி" படம்.

இடையில், காவலன், நண்பன் ஆகிய படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றன. ஆனால், அவை இரண்டும் ரீமேக் படங்கள் என்பதால் விஜயின் சினிமா வாழ்க்கைக்கு துணையாக நிற்கவில்லை.

எதன் அடிப்படையில் கதை தேர்வு செய்கிறார் என்று பல விமர்சனங்கள் விஜய் மீது எழுந்தன. ஆனால், அவை அனைத்தையும் சுக்கு சுக்காக உடைத்து எரிந்தது "துப்பாக்கி" திரைப்படம்.

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களில் முன்னணி நடிகராக வளம் வருபவர், வசூல் மன்னன் என்றால் விஜய்யும் ஒருவர், விஜய் வாழ்க்கையை புரட்டி போட்ட திரைப்படம் தான் துப்பாக்கி.

இந்த திரைப்படம் 100 கோடியை தொட்ட திரைப்படம். இப்படி விஜய்க்கு ஒரு திருப்புமுனையாக அமைந்த "துப்பாக்கி" படத்தில் முதலில் நடிக்கவிருந்தது பாலிவுட் நடிகர் அக்க்ஷய் குமார் தானாம்.

துப்பாக்கி படத்தின் கதையை இயக்குனர் முருகதாஸ் கூறினாராம், அவரும் கதையை கேட்டுவிட்டு நடிக்க சம்மதம் தெரிவித்துவிட்டார் ஆனால் ஒரு சில காரணங்களால் தான் படபிடிப்பு தள்ளி போனதாம். இதற்க்கு இடையில் தான் விஜயிடம் முருகதாஸ் கதை சொல்லியுள்ளார்.

கதையை கேட்டு விஜய்க்கு பிடித்துவிட்டது, அதனால் முருகதாஸ் அக்க்ஷய் குமாரிடம் தமிழில் விஜய்யை வைத்து இந்த படத்தை எடுக்கட்டுமா..? என கேட்டுள்ளார், அக்க்ஷய் குமாரும் உங்களுடைய இஷ்டம்.

நான் இப்பொழுது பிஸியாக இருக்கிறேன். இன்னும் ஒரு வருடத்திற்கு கால் ஷீட் கொடுப்பது கடினமான விஷயம். அதனை, நீங்கள் படத்தை முடித்து விட்டே வாருங்கள் என கூறியுள்ளார் அக்க்ஷய் குமார்.


துப்பாக்கி படத்தில் விஜய் நடித்தார், படமும் மெகா ஹிட் ஆனது அதன் பிறகு தான் சில மாதங்கள் கழித்து முருகதாஸ் துப்பாக்கி படத்தை ஹிந்தி ரீமேக்கான ஹாலிடே படத்தை எடுக்க தொடங்கினார், முதலில் அக்க்ஷய் குமார் கால் சீட் கொடுத்திருந்தால் துப்பாக்கி படத்தில் முதலில் அக்க்ஷய் குமார்தான் நடித்திருப்பார்.

வழக்கம் போல துப்பாக்கி படமும் ரீமேக் படம் என்ற விமர்சனத்தை சந்தித்திருக்கும்.

"துப்பாக்கி" படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்கவிருந்தது யாருன்னு தெரிஞ்சா தூக்கி வாரி போட்ரும்..! "துப்பாக்கி" படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்கவிருந்தது யாருன்னு தெரிஞ்சா தூக்கி வாரி போட்ரும்..! Reviewed by Tamizhakam on July 24, 2020 Rating: 5
Powered by Blogger.