தங்ககடத்தல் கும்பலுடன் தொடர்பு..? - நடிகர் உதயநிதி ஸ்டாலின் பட தயாரிப்பாளர் பதில்..!


கடந்த இரண்டு வாரங்களாக கேரளாவையே உலுக்கி வருகிறது தங்க கடத்தல் மோசடியும் அதன் பின்னியில் உள்ள கும்பல் கைதுகளும். இந்த விவாகரம் மெல்ல மெல்ல விஸ்வரூபம் எடுத்து வருகின்றது.

இந்தநிலையில், மலையாளத்தில் டொவினோ தாமஸ் - ஐஸ்வர்யா லட்சுமி இணைந்து நடித்த மாயநதி படத்தின் தயாரிப்பாளர் சந்தோஷ் டி.குருவில்லா தங்க கடத்தல் கும்பலிடம் இருந்து பணம் பெற்றுத்தான் மாயநதி படத்தை தயாரித்தார் என சோஷியல் மீடியாவிலும் சில ஊடகங்களிலும் செய்திகள் வெளியாகின.

இவர் தான் தமிழில் பிரியதர்ஷன் இயக்கத்தில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடித்த "நிமிர்" படத்தையும் தயாரித்தவர்.ஆனால் இந்த செய்தியில் உண்மையில்லை என மறுப்பு தெரிவித்துள்ளார் சந்தோஷ் குருவில்லா.

இந்நிலையில், இந்த தகவல் குறித்து சந்தோஷ் குருவில்லா கூறுகையில், இந்தப்படத்திற்காக செலவு செய்த ஒவ்வொரு காசும் எனது வங்கிக்கணக்கு மூலமாக செலவு செய்யப்பட்டுள்ளது.

அதற்கு முறையான வரியும் கட்டியிருக்கிறேன். இப்படி ஒரு செய்தியை யார் பரப்பினார்கள். இதில் என்னை கோர்த்து விடுவதால் யாருக்கு என்ன லாபம் என்றுதான் புரியவில்லை என காட்டமாக கூறியுள்ளார் சந்தோஷ் டி.குருவில்லா.

கேரளாவை தங்க கடத்தல் விவகாரம் உலுக்குகிறது என்றால், தமிழகத்தை திமுக எம்.எல்.ஏவின் மான்கறி வேட்டை உலுக்குகிறது. உதயநிதி ஸ்டாலினுக்கு மான்கறி பிடிக்கும் என்பதால் அவருக்கு வனப்பகுதியில் இருக்கும் மான்களை வேட்டையாடி கொண்டுபோய் சப்ளை செய்வார் அந்த தி.மு.க எம்.எல்ஏ என்று அந்த ஊரில் உள்ள ஒருவர் கூறியுள்ளார்.

மேலும், என் மீது தி.முக வழக்கு தொடர்ந்தால் அதனை சந்திக்க நான் தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளார். இத்தனைக்கும், இந்த விவகாரம் குறித்து மெயின்ஸ்ட்ரீம் மீடியாக்கள் வாயே திறக்க மறுக்கின்றன. ஆனால், ஒரே ஒரு இளம் ஊடகவியலாளர் மட்டும் தொடர்ந்து இது குறித்த தகவல்களை இணையம் வாயிலாக பதிவு செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.