பரதநாட்டியம் ஆடும் போது வழுக்கி விழுந்த லக்ஷ்மி மேனன் - வைரலாகும் வீடியோ..!
இயக்குனர் பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியான ‘கும்கி’ படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமான நடிகை லட்சுமி மேனன் பாண்டியநாடு, சுந்தர பாண்டியன், கொம்பன், மிருதன், வேதாளம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
கடைசியாக விஜய் சேதுபதியுடன் ‘றெக்க’ படத்தில் நாயகியாக நடித்திருந்தார். அதற்குப் பின் அவர் நடிப்பில் படங்கள் எதுவும் வெளியாகவில்லை.
படிப்பு தான் இப்போதைக்கு முக்கியம் என்று உணர்ந்த லக்ஷ்மி மேனன். சினிமாவுக்கு முழுக்கு போட்டு விட்டு ஊரை காலி செய்து கொண்டு கிளம்பினார். ஆனால், தற்போது அவருக்கு திருமணம் செய்து வைக்க குடும்பத்தினர் யோசித்து வருவதாகவும் அவ்வப்போது தகவல்கள் வந்து கொண்டிருகின்றன.
இயக்குநர் பி.ஜி.முத்தையா இயக்கத்தில் கவுதம் கார்த்திக் நடிக்கும் புதிய படத்தில் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியிருப்பதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு தகவல் வெளியாகியிருந்த நிலையில் படக்குழு இதுவரை எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை.
இந்நிலையில் லட்சுமி மேனன் பரதநாட்டியம் ஆடும் போது கீழே தவறி விழும் வீடியோ ஒன்று சமூகவலைதளத்தில் கவனம் பெற்று வருகிறது. தரையில் தண்ணீர் இருப்பதை கவனிக்காததால் தவறி விழுந்ததாக அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பரதநாட்டியம் ஆடும் போது வழுக்கி விழுந்த லக்ஷ்மி மேனன் - வைரலாகும் வீடியோ..!
Reviewed by Tamizhakam
on
July 17, 2020
Rating:
