"பேச்சா டா பேசுன..? - மன்னர் பரம்பர.. மன்னாங்கட்டி பரம்பரன்னு" - தியேட்டர்கள் போலவே OTT தளங்களும் ஆப்பு வைத்த நடிகர்கள்..!


கொரோனா வைரஸ் காரணமாக பல தொழில்கள் படுத்துள்ளன. ஆனால், இந்த சூழலை பயன்படுத்தி மாஸ்க் முதல் சானிடைசர் வரை என குடிசை தொழில் தொடங்கி, பெரும் நிறுவனங்கள் வரை கல்லா கட்டி வருகின்றது.

திரையரங்குகள் இப்போதைக்கு திறப்பது போல தெரியவில்லை வரும் தீபாவளியா..? இல்லை.. அடுத்த வருட பொங்கலா..? என்று கடவுளுக்கு மட்டுமே தெரியும். இந்த சூழலை பயன்படுத்து ஆன்லைன் பிளாட்பார்மில் கொடி கட்டி பறக்கும் அமேசான் ப்ரைம் மற்றும் நெட்ஃபிளிக்ஸ் போன்ற OTT தளங்கள் கடையை விரித்து கொள்ளை லாபம் பார்த்து வருகின்றன.

வெப்சீரிஸ், ஏற்கனவே தியேட்டரில் வெளியான படங்கள் என வண்டியை ஓட்டி வந்த OTT's இப்போது நேரடியாக படத்தை ரிலீஸ் செய்து தியேட்டர்காரர்கள் வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொண்டிருகின்றன.

சினிமா தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும். தியேட்டர்காரர்களுக்கு எப்படி OTT-யினால் பிரச்சினை வந்ததோ அதேபோல OTT-காரர்களுக்கு அதே மாதிரியான ஒரு பிரச்சனை வந்துள்ளது. சினிமா படங்களை ரிலீஸ் செய்ய உங்களால் மட்டும்தான் முடியுமா..? அது எங்களாலும் முடியும் என்று தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் தனித்தனியாக கிளம்பிவிட்டனர்.

ஏன் நடிகர்-நடிகைகளும் கூட சேர்ந்து கொண்டு கிளம்பி விட்டனர். OTT-களுக்கு படங்களை விற்பனை செய்வதால் அவர்களுடைய கட்டுப்பாட்டுக்குள் படங்கள் இருக்க வேண்டும் என்று இருந்தது.

மேலும் OTT தள நிர்வாகம் சொல்கிற விலைதான் என்று நிர்ணயிக்கப்பட்டது. இதனால் சற்று கடுப்பான சினிமாக்காரர்கள் தாங்களே ஒரு OTT பிளாட்பார்ம்களை உருவாக்கிக் கொள்கிறோம் என்று தனித்தனியாக கிளம்பிவிட்டனர்.

இதற்கு முன்னோடியாக ராம்கோபால் வர்மா ‘நேக்கட்’ என்ற படத்தை எடுத்து அரை மணி நேரத்தில் 50 லட்ச ரூபாய் சம்பாதித்து விட்டார் மனுஷன். அடுத்து ஷெர்லின் சோப்ரா அவருக்கென ஒரு மொபைல் ஆப் உருவாக்கிக்கொண்டு மாதம் 299 ரூபாய் க்கு சப்ஸ்கிரைப் செய்தால் போதும் என்று அவருடைய படத்தை அவர் வெளியிட்டு வருகிறார்.

அதேபோல தமிழகத்திலும் தனியாக ஒரு OTT பிளாட்பார்ம் போன்று ஆரம்பித்து அதில் அவர்களுடைய படத்தை வெளியிடப் போகிறார்கள். இனி யாரும் யாரை நம்பியும் இல்லை. இப்படி ரசிகர்கள் சப்ஸ்கிரைப் செய்துகொண்டு யார் வேண்டுமாலும் படத்தை பார்க்கலாம் என்று முடிவெடுத்து விட்டார்கள்.

யார் படத்தை பார்க்க வேண்டும் என்று மக்களே தீர்மானித்துக் கொள்ளலாம். ஒரு லட்சம் பேரை சப்ஸ்கிரைப் செய்ய வைத்துவிட்டால் ஒருவருக்கு 200 ரூபாய் என சந்தா வைத்துக்கொண்டால் போதும் 2 கோடி ரூபாய் வரை வருமானம் வருகிறது.

ஒரு படத்தை ஒன்றரை கோடி ரூபாய்க்கு எடுத்து அதனை 2 கோடி ரூபாய்க்கு வியாபாரம் செய்தால் கூட 50 லட்சம் ரூபாய் வருமானம் கிடைக்கிறது. இதுவே போதும் என்று நினைக்கிறார்கள் நம்ம சினிமாக்காரர்கள்.

இப்படி பெரிய நடிகர்களான ரஜினி, விஜய், அஜித் ஆரம்பித்தால் அவருடைய ரசிகர்களே போதும் ஒரு லட்சம் என்ன 10 லட்சம் வரை சந்தாகாரராக சப்ஸ்கிரைப் செய்வார்கள்.

அப்படி செய்தால் அவர்களுடைய வருமானத்தை நினைத்து பாருங்கள். இந்த ஐடியாவுக்கெல்லாம் யார் காரணமோ இல்லையோ..? கொரோனாவும் ஒரு காரணம். நடிகர் , நடிகைகள் நேரடியாக ஆப் உருவாக்கி படத்தை ரிலீஸ் செய்தால் தியேட்டர்கள் நிலை என்னாவது..? என்று கேட்கிறார்கள் தியேட்டரில் சென்று தான் படம் பார்ப்பேன் என்று கூறும் ரசிகர்கள்.

ஆனால், எதிர்காலத்தில் தியேட்டரிலும் படம் பார்க்கலாம்.. குறிப்பிட்ட நடிகர் அல்லது தயாரிப்பு நிறுவனம் வெளியிடும் ஆப்பிலும் ரிலீஸ் ஆகும் நாளன்றே படம் பார்க்கலாம் என்ற நிலை கண்டிப்பாக வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

"பேச்சா டா பேசுன..? - மன்னர் பரம்பர.. மன்னாங்கட்டி பரம்பரன்னு" - தியேட்டர்கள் போலவே OTT தளங்களும் ஆப்பு வைத்த நடிகர்கள்..! "பேச்சா டா பேசுன..? - மன்னர் பரம்பர.. மன்னாங்கட்டி பரம்பரன்னு" - தியேட்டர்கள் போலவே OTT தளங்களும் ஆப்பு வைத்த நடிகர்கள்..! Reviewed by Tamizhakam on July 05, 2020 Rating: 5
Powered by Blogger.