12 வயதே ஆன பூவையார் அவர்களின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா..?

தமிழ் சினிமாவுக்கும் பிரபல தனியார் தொலைக்காட்சி சேனாலான விஜய் தொலைக்காட்சிக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. ஏனென்றால், அந்த தொலைகாட்சியில் பயணத்தை தொடங்கிய பலரும் தற்போது தமிழ் திரைத்துறையில் நல்ல இடத்தில் இருந்து வருகின்றனர்.

குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் நடிகர் சந்தனம், சிவகார்த்திகேயன், ரோபோ ஷங்கர் ஆகியோரை கூறலாம். மேலும் ஒருவர் விஜய் டிவியின் மூலம் மிகவும் பிரபலமாகி தற்போது தளபதி விஜய்யுடன் இணைந்து 2 படங்கள் நடித்துவிட்டார்.

சூப்பர் சிங்கர் சீசன் 6 மூலம் கானா பாடல்கள் பாடி மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் பூவையார். இவர் 2019 ஆன் ஆண்டு வெளியான விஜய்யின் பிகில் படத்தில் வெறித்தனம் பாடலை பாடி அதில் நடித்தும் இருப்பார். மேலும் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்திலும் விஜய்யுடன் இணைந்து நடித்துள்ளார் பூவையார்.

இந்நிலையில் பாடகர் பூவையாரின் தற்போதைய சொத்து மதிப்பு என்ன என்ற தகவல்கள் இணையத்தில் பரவி வருகின்றன. அதன் படி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் பூவையருக்கு 4 லட்சத்தில் சொந்த வீடு உள்ளது. சென்னையில் சொந்த பிளாட் மற்றும் சொந்த கார் வைத்துள்ளாராம். அது மட்டும் இல்லை சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் 3ஆம் பரிசு வென்று ரு 10 லட்சம் வைத்துள்ளாராம்.

மேலும் தனது கடின உழைப்பாலும் மற்றும் இசை திறமையாலும் தற்போது 20 லட்சம் சொத்து வைத்துள்ளாராம் பாடகர் பூவையார் அவர்கள்.

12 வயதே ஆன பூவையார் அவர்களின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா..? 12 வயதே ஆன பூவையார் அவர்களின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா..? Reviewed by Tamizhakam on August 05, 2020 Rating: 5
Powered by Blogger.