தன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா - ஷாக் ஆன ரசிகர்கள்..! - ஹீரோ யாரு தெரியுமா..?


இயக்குனர் "மிலந்த் ராவ்" இயக்கத்தில் நயன்தாரா நடிக்கும் 'நெற்றிக்கண்' படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கப்பட்டுள்ளது. சித்தார்த், ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'அவள்'. 

நடிகர் சித்தார்த் தயாரித்த இந்தப் படம் 2017-ம் ஆண்டு வெளியானது. அதனைத் தொடர்ந்து 'அவள் 2' படத்தின் பணிகளைக் கவனித்து வந்தார். அந்தப் படத்தின் பணிகள் தள்ளிப் போனதால், தனது புதிய படத்துக்கான கதை விவாதத்தில் ஈடுபட்டு வந்தார்.

இதில் நடிக்க நயன்தாரா சம்மதம் தெரிவித்தார். இதன் கதையைக் கேட்டுவிட்டு, நயன்தாராவின் காதலன் இயக்குநர் விக்னேஷ் சிவன் தன்னுடைய "ரௌடி பிக்சர்ஸ்" நிறுவனத்தின் மூலம் தயாரிக்க முன்வந்தார். 

இந்த படத்தில் படப்பிடிப்பு கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கியது. இதற்கு 'நெற்றிக்கண்' எனப் பெயரிட்டு போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர். ரஜினி நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற படம் 'நெற்றிக்கண்'. அந்தப் படத்தைத் தயாரித்த கவிதாலயா நிறுவனத்தினரிடமிருந்து அதிகாரப்பூர்வமாகத் தலைப்புக்கு உரிமைப் பெற்று வைத்துள்ளனர். 

இந்தப் படத்தில் நயன்தாரா கதாபாத்திரம் அவரது முந்தைய படங்களிலிருந்து வித்தியாசப்பட்டு இருக்கும் என்று இயக்குநர் மிலந்த் ராவ் தெரிவித்துள்ளார். 'ஐரா', 'மிஸ்டர் லோக்கல்', 'கொலையுதிர் காலம்' ஆகிய படங்களின் தோல்வியால், எந்தவொரு புதிய படத்திலும் ஒப்பந்தமாகாமலிருந்தார் நயன்தாரா. அதற்குப் பிறகு மிலந்த் ராவ் இயக்கத்தில் நயன்தாரா நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

இந்த படத்தில் பார்வையற்ற பெண்ணாக நடிக்கிறார் நயன்தாரா. மேலும், இந்த படத்தின் இளம் நடிகர் சரண் சக்தி ஹீரோவாக நடிக்கிறார் என்று கூறப்படுகிறது. 

நடிகை நயன்தாராவிற்கு தற்போது 36 வயது ஆகின்றது. ஆனால், இந்த படத்தில் ஹீரோவாக நடிக்க கமிட்டாகியுள்ள சரண் சக்திக்கு 22 வயது தான் ஆகின்றது. 


தன்னை விட 14 வயது குறைவான நடிகருடன் நயன்தாரா ஜோடியாக நடிப்பது குறித்த தகவல் ரசிகர்களை ஷாக் ஆக்கியுள்ளது. நடிகர் சரண் சக்தி நயன்தாராவுக்கு ஜோடியாக நடிக்கிறாரா..? அல்லது, ஃப்ளாஷ் பேக் காட்சிகள் இருந்து அதில் வரும் நயன்தாரா கதாபாத்திரத்திற்கு ஜோடியாக நடிக்கிறாரா..? என்பது படம் வெளியான பிறகு தான் தெரியும்.

தன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா - ஷாக் ஆன ரசிகர்கள்..! - ஹீரோ யாரு தெரியுமா..? தன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா - ஷாக் ஆன ரசிகர்கள்..! - ஹீரோ யாரு தெரியுமா..? Reviewed by Tamizhakam on August 10, 2020 Rating: 5
Powered by Blogger.