"உசுரே போனாலும் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க மாட்டேன்" - 4 கோடி ரூபாய் சம்பளம் பேசியும் மறுத்த நயன்தாரா..!


நயன்தாரா தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை. கோலிவுட் திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டாராக இருக்கும், நயன்தாரா ஐயா படத்தில் நடிக்க துவங்கும் போது, லட்ச கணக்கில் சம்பளம் வாங்கும் நடிகையாக இருந்தார்.

ஆனால் தற்போது ஒரு படத்திற்கு 4 கோடி முதல் 5 கோடி வரை சம்பளமாக பெறுகிறார்.இவர் நடிப்பில் விரைவில் "மூக்குத்தி அம்மன்" படம் திரைக்கு வரவுள்ளது. 

இப்படத்தை பார்க்க ரசிகர்கள் மிக ஆவலுடன் உள்ளனர். ஏனெனில் நயன்தாரா இப்படத்தில் அம்மனாக நடித்துள்ளார். தற்சமயம் நெற்றிக்கண், அண்ணாத்த, காத்துவாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்களில் நடித்து வருகிறார் நயன்தாரா.

கொரோனா பிரச்னை முடிந்து இயல்புநிலை திரும்பிய பின்னரே படப்பிடிப்பில் பங்கேற்க நயன்தாரா திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.இவர் நடிக்கும் படங்கள் தனி ஹீரோவிற்கு சமமாக, வசூலில் கல்லா கட்டி வருவதால், தொடர்ந்து முன்னணி ஹீரோக்கள் இவருடன் ஜோடி போட ஏங்குகிறார்கள்.

அந்த வகையில் பார்த்தல், நயன்தாரா ரஜினிகாந்த்,விஜய், அஜித், சூர்யா, தனுஷ், கார்த்தி என அணைத்து முன்னணி நடிகர்களுடனும் இணைந்து நடித்துவிட்டார்.இதுமட்டுமல்லாமல் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளிலும், தொடர்ந்து நடித்து வருகிறார். 

இந்நிலையில் தெலுங்கில் நயன்தாராவை பாலிவுட்டில் சூப்பர் ஹிட் ஆன அந்தாதூன் படத்தின் ரீமேக்கில் நடிக்க அணுகினார்களாம். இதில் ஹீரோவிற்கு நிகராக கதாபாத்திரத்தில் தான் தபு நடித்திருப்பார். 

ஆனால், பணத்திற்காகவும், கள்ளக்காதலுக்காகவும் தன் கணவரையே கொலை செய்யும் கதாபாத்திரம் அது என்பதால் ரூ 4 கோடி வரை சம்பளம் தருகிறேன் என கூறியும் நயன்தாரா இதில் நடிக்க மறுத்ததாக கூறப்படுகிறது. 

நயன்தாரா வழக்கமாக வாங்கும் சம்பளத்தை விட கூடுதலாக கொடுக்க தயாரிப்பாளர் முன்வந்த போதும் காதலருக்காக கணவரை கொலை செய்யும் சர்ச்சைக்குரிய கதாபாத்திரம் என்பதால் அப்படத்தில் நடிக்க நயன்தாரா மறுப்பு தெரிவித்திருப்பதாக கூறப்படுகிறது

"உசுரே போனாலும் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க மாட்டேன்" - 4 கோடி ரூபாய் சம்பளம் பேசியும் மறுத்த நயன்தாரா..! "உசுரே போனாலும் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க மாட்டேன்" - 4 கோடி ரூபாய் சம்பளம் பேசியும் மறுத்த நயன்தாரா..! Reviewed by Tamizhakam on August 13, 2020 Rating: 5
Powered by Blogger.