"காதல் மன்னன்" - கடைசி நாள், கடைசி காட்சி படப்பிடிப்பில் கண் கலங்கிய இயக்குனர்..! - அஜித் சொன்ன ஒரே வார்த்தை..!


இயக்குனர் சரண் எப்போதுமே ‘சிறந்த பொழுதுபோக்கு’ படங்களுக்காக பாராட்டப்படுகிறார். அவரது திரைப்படங்கள் காதல், ஆக்‌ஷன், நகைச்சுவை, இளைஞர்கள் மற்றும் குடும்ப பார்வையாளர்களின் ரசனைகளை பூர்த்தி செய்யும் எல்லா வற்றையும் தாராளமாக கொண்டிருக்கின்றன.

சரண் அவர்களின் திறமையானது சிறந்த பொழுதுபோக்கு படங்களை வழங்குவதில் மட்டும் இல்லை, அதையும் தாண்டி ஒவ்வொரு கதாபாத்திரத்தை வடிவமைப்பதிலும், சரியான கலைஞர்களை அந்த கதாபாத்திரத்தில் நடிக்க வைத்து, அதிர்ச்சியூட்டும் தாக்கத்தை ஏற்படுத்துவதிலும் அவரது புத்திசாலித்தனம் அதிக அலங்காரங்களை படத்துக்கு சேர்க்கிறது.

தற்போது, பிக்பாஸ் நடிகர் ஆரவ் நஃபீஸ் என்பவரைஹீரோவாக வைத்து மார்கெட் ராஜா MBBS என்ற படத்தில் இயக்கி கொண்டிருக்கிறார். நடிகர் அஜித்தின் சினிமா வரலாற்றில் இயக்குனர் சரணுக்கு முக்கியமான இடம் உண்டு.

ஆம், அஜித்திற்கு நல்ல அடையாளம் கொடுத்த காதல் மன்னன் படத்தை இயக்கியது இவர் தான். இதில் இன்னொரு விஷயம் என்னவென்றால் காதல் மன்னன் தான்இயக்குனர் சரணின் முதல் திரைப்படம்.

இந்த படம் குறித்து சுவாரஸ்யமான விஷயம் ஒன்றை சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் சரண். காதல் மன்னன் படத்தின் படப்பிடிப்பு முடியும் நாள், கடைசி காட்சி கிளாப் போர்டு அடிக்கும் போது அவரை அறியாமல் ஒரு பயம் வந்து விட்டதாம். இதனை தெரிந்து கொண்ட நடிகர் அஜித் அவரிடம் சென்று என்ன விஷயம். ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க..? என்று கேட்டுள்ளார்.

அப்போது, இது தான் நான் அடிக்கும் கடைசிக்ளாப் போர்டாக இருக்குமோ என பயமாக உள்ளது. இந்த படம் ஹிட் ஆனால் தான் என்னால் அடுத்த படத்தை எடுக்க முடியும் என்று கூறி கண் கலங்கியுள்ளார் சரண். இதனை கேட்ட அஜித், அப்படி எல்லாம் ஒன்னும் ஆகாது ஜி.. கண்டிப்பா இந்த படம் ஹிட் ஆகும் நம்புங்க என்று கூறினாராம்.

அவர் சொன்னது போல காதல் மன்னன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதன் பிறகு, அமர்க்களம், அட்டகாசம், அசல் என 

எல்லோருக்குமே ஒரு படத்தை இயக்குவது, அதுவும் முதல் படத்தை இயக்கம் போது இருக்கும் பயம் என்னவென்று பல இயக்குனர்கள் சொல்ல கேட்டிருக்கிறோம். இப்போது, சரணும் அதனை வெளிப்படுத்தியுள்ளார். 

"காதல் மன்னன்" - கடைசி நாள், கடைசி காட்சி படப்பிடிப்பில் கண் கலங்கிய இயக்குனர்..! - அஜித் சொன்ன ஒரே வார்த்தை..! "காதல் மன்னன்" - கடைசி நாள், கடைசி காட்சி படப்பிடிப்பில் கண் கலங்கிய இயக்குனர்..! - அஜித் சொன்ன ஒரே வார்த்தை..! Reviewed by Tamizhakam on August 17, 2020 Rating: 5
Powered by Blogger.