இந்த புகைப்படத்தில் இருக்கும் பிரபலம் யாருன்னு தெரியுதா..? - தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..!


இந்த புகைப்படத்தில் இருக்கும் இவர் தமிழக அரசியல்வாதிகளில் பிரபலமான ஒருவர். அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவர். தற்போது தமிழ்நாடு சட்டமன்றத்தின் உறுப்பினராக இருக்கிறார். 

சட்டமன்றத்தின் சபாநாயகராக இருந்து பிறகு அப்பதவியை இராஜினாமா செய்தார். அதிமுக சார்பாக 1991, 2001, 2006, 2011 மற்றும் 2016 தேர்தலில் ராயபுரம் தொகுதியிலிருந்து போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராக தேர்வானவர். 

தற்போது மீன்வளம், நிர்வாக சீர்திருத்தத்துறை அமைச்சராக பணியாற்றும் ஜெயக்குமார், இராயபுரம் தொகுதியின் வலுவான அதிமுக வேட்பாளர்.

இவர் அரசியல் வாதி மட்டுமில்லாமல் வழக்கறிஞரும் கூட. இவருக்கு மீனவர் சமுதாயத்தில் பெரும் ஆதரவு உள்ளது. பச்சையப்பா கல்லூரியில் இளங்கலை அறிவியல் படிப்பை முடித்த இவர் மெட்ராஸ் சட்டக்கல்லூரியில் இளங்கலை சட்டம் பயின்றார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டு,ராயபுரம் தொகுதியில் வெற்றி பெற்றார். சட்டமன்ற உறுப்பினர் ஆன பின்பு, ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரியவராக மாறினார்.

மீண்டும் ராயபுரம் தொகுதியில் இருந்து சட்டமன்றத்திற்கு தேர்வானார். 2011ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலிலும் ராயபுரம் தொகுதியில் இருந்து தேர்வானார். அதே ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத்தின் சபாநாயகராக நியமிக்கப்பட்டார்.

2016 தேர்தலில் அதிமுக வெற்றி பெற்ற பின்னர், சசிகலா உதவியுடன் ஜெயலலிதாவை சமாதானப்படுத்தி மீன்வளத்துறை அமைச்சரானார். ஜெயலலிதா மறைவுக்கு பின்னர், 2017ஆம் ஆண்டு துவக்கத்தில் ஈபிஎஸ்- ஓபிஎஸ் பிரிந்த போது, சசிகலாவின் ஆதரவுடன் நிதியமைச்சரானார்.


ஆம், இளைஞர்களுக்கு மிகவும் பிடித்த அரசியல் வாதிகளில் ஒருவரான நம்ம அமைச்சர் ஜெயக்குமார் தான் இவர்.

இந்த புகைப்படத்தில் இருக்கும் பிரபலம் யாருன்னு தெரியுதா..? - தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..! இந்த புகைப்படத்தில் இருக்கும் பிரபலம் யாருன்னு தெரியுதா..? - தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..! Reviewed by Tamizhakam on August 18, 2020 Rating: 5
Powered by Blogger.