"இந்த நேரத்தில் இப்படி போட்டோ போடலாமா..?" - சிங்கிள்களை கதற விடும் சீரியல் நடிகை நித்யா ராம்..!


கன்னடம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் பிசியாக நடித்துக் கொண்டிருப்பவர். நித்தியா ராம். இவர் கன்னட தொலைக்காட்சி தொடர்களில் தான் தனது நடிப்பை தொடங்கினார். அவர் நடிகை ரக்ஷிதா ராமின் மூத்த சகோதரி. 2017 வாக்கில் நந்தினி சீரியலில் நந்தினி ஆக நடித்து ரசிகர்களை மிரட்டி இருப்பார். 

நித்யா ராம் குடும்பமே ஒரு கலைக்குடும்பம் தான். அவரது தந்தை கே எஸ் ராமு மற்றும் சகோதரி ரசித்தா ராம் ஆகியோர் கிளாசிக்கல் நடன கலைஞர்களாக உள்ளனர்.இயக்குனர் சுந்தர் சி தயாரிப்பில் ஒளிபரப்பாகி வரும் நந்தினி சீரியலின் மூலம் தமிழ் சின்னத்திரைக்கு அறிமுகமானவர்தான் நடிகை நித்யா ராம். 

இந்நாடகம் இவருக்கு மிகப்பெரிய வெற்றியையும், பிரபலத்தையும் தந்துள்ளது என்பதுதான் உண்மை. அதுமட்டுமல்லாமல் இவருடைய ஸ்டைலான புடவைகள் மற்றும் ஹேர்ஸ்டைல்க் என தனி ரசிகர் பட்டாளமே உள்ளது முக்கியமாக பெண்களுக்கு பிடித்தவராக வலம் வருகிறார்.நித்யாவுக்கு டான்ஸ் சூப்பரா வரும்.. அத்தோடு படிப்பிலும் கில்லியாம். 

உயிரித் தொழில்நுட்பத்தில் பட்டப்படிப்பு பெற்றிருக்கிறார். கொஞ்சகாலம் ஒரு கம்பெனில வேலை பார்த்தார் .ஆனா அவரோட கனவு, கதாநாயகியாக ஆவதுதான்.. எனவே அந்தக் கனவின் பக்கமே மனசு அலை பாய்ந்து வந்ததால் வேலையா விட்டு விட்டார்.

இவர் சின்னத்திரையில் மட்டுமல்ல தெலுங்கில் ஒரு படத்தில் கூட ஹீரோயினியாக நடித்து பிரபலம் அடைந்துள்ளார். இவருடைய அழகின் காரணமாக நந்தினி சீரியலின் டிஆர்பி அதிகரித்துக்கொண்டே வருகிறது.நித்யா ராமின் நந்தினி சீரியலுக்கு பிறகு குஷ்பு உடன் இணைந்து லஷ்மி ஸ்டோர் என்ற சீரியலில் நடித்து வருக்கிறார். இந்த சீரியல் இவர்கள் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை தரவில்லை.ஒருவரை ஒருவர் தொடுவதால் வைரஸ் பரவும் என்பதால் ஒழுக்கமான முறையில் ரொமான்ஸில் ஈடுபடுங்கள் என்று அந்தப் படத்தின் தலைப்பாக அவர் பதிவிட்டிருக்கிறார். 


இந்த போட்டோ பழையதாக இருந்தாலும் ரசிகர்கள் இதை பார்த்து கிறங்கிக் கொண்டுதான் இருக்கிறார்கள். கமிட்டடா ஆனவங்க இப்படி கிஸ் கொடுத்து இருக்கீங்க. நாங்க சிங்கிள்ஸ்ஆக இருந்துட்டு இதைப்பார்த்து கதறனும் அது தானே உங்களுடைய கெட்ட எண்ணம். என்று கலாய் கருத்துகளை வெளியிட்டு வருகிறார்கள்.

"இந்த நேரத்தில் இப்படி போட்டோ போடலாமா..?" - சிங்கிள்களை கதற விடும் சீரியல் நடிகை நித்யா ராம்..! "இந்த நேரத்தில் இப்படி போட்டோ போடலாமா..?" - சிங்கிள்களை கதற விடும் சீரியல் நடிகை நித்யா ராம்..! Reviewed by Tamizhakam on August 14, 2020 Rating: 5
Powered by Blogger.