ஒரே காரணத்துக்காக அந்த படத்தில் நடிக்க மறுக்கும் முன்னணி ஹீரோயின்கள்..! - அட கொடுமய..!

சமீப காலமாக இந்திய சினிமா மட்டுமல்லாமல் உலக சினிமாவே கடுமையான கதைப்பஞ்சத்தில் சிக்கி தவிக்கிறது. ஹீரோவுக்காக படம் பார்த்த காலமெல்லாம் மலையேறி போச்சு. கதை தான் ஹீரோ. நல்ல கதை இருந்தால் நாய் நடித்தல் கூட படம் ஹிட் என்ற நிலைதான் இப்போது.

இதனால், நடிகர்கள் கதையை தேர்வு செய்வதில் கடுமையான கவனத்தை செலுத்தி வருகிறார்கள். மேலும், முன்னணி இயக்குனர், அறிமுக இயக்குனர் என பாகுபாடு இல்லாமல் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து பயணிக்க தொடங்கியுள்ளனர்.

மேலும், அறிமுக இயக்குனர்களாக இருக்கும் பலரும் இளம் வயதினர் என்பதால் இன்று உள்ள நடைமுறை, தொழில்நுட்பம், இன்றைய இளம் தலைமுறையினர் எதிர்பார்க்கும் விஷயங்களை புரிந்து வைத்துள்ளார்கள். ஆனால், பழைய இயக்குனர்களிடம் அதனை எதிர்பார்ப்பது கஷ்டம்.

இதனால், இளம் இயக்குனர்கள் ராஜ்ஜியம் தான் உலக சினிமாவில் நடக்கிறது. கதை பஞ்சத்தால் ஏற்கனவே ஹிட் அடித்த படத்தின் இரண்டாம் பாகம், மூன்றாம் பாகம் என வண்டியை உருட்டி வருகிறார்கள்.

நிலைமை இப்படி இருக்க, தயாரிப்பாளர்களுக்கு சமீப காலமாக நம்பிக்கை கொடுத்துள்ள விஷயம் பயோபிக் படங்கள் தான். விளையாட்டு வீரர், அரசியல் வாதிகள், முன்னாள் நடிகைகள், ராணுவ வீரர்கள், அறிவியல் அறிஞர்கள் என அந்தந்த துறையில் சாதித்தவர்களின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்க தயாரிப்பாளர்கள் ஆர்வம் காட்டுகிறார்கள்.

அந்த வகையில், எடுக்கபட்ட சில்க் ஸ்மிதாவின் டர்ட்டி பிக்சர்ஸ், கிரிகெட் வீரர் தோணி படம் முதல் சாவித்திரியின் மகாநதி வரை நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. மேலும், பல பயோபிக் படங்கள் வரிசை கட்டி நிற்கின்றன.அதில் ஒன்றுதான் அந்த வீராங்கனையின் படம்.

அந்தப் படத்தில், பாலிவுட்டிலும் தென்னிந்திய சினிமாவிலும் அறிமுகமான சில நடிகைகளை நடிக்க வைக்க முதலில் முடிவு செய்தார்கள். அப்படி இருந்தால், தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட மற்ற மொழிகளிலும் வியாபாரம் செய்ய வசதியாக இருக்கும் என நினைத்தார்கள். அதனால் அந்த அகர்வால் நடிகை, ஐதராபாத்தில் செட்டிலாகிவிட்ட சிங் நடிகை உள்பட சில ஹீரோயின்களிடம் பேசினார்களாம்.

ஆனால், கதை கேட்ட நடிகைகள் வாயே திறக்காமல் அப்புறம் சொல்லுறேன் என்று அனுப்பி விடுகிறார்களாம். ஏனென்றால் படத்தின் ஹீரோயினாக நடிப்பவர், பளு தூக்க வேண்டும். அதையாவது டம்மியாக காண்பித்துக் கொள்ளலாம். ஆனால், உடல் எடையை அதிகரித்து, கைகால்களில் கட்ஸ் தெரியுமாறு இருக்க வேண்டும் என்று சொல்கிறார்களாம்.

அது போதாது என உடல் எடையை கூட்டவும், பிறகு கட்டுமஸ்தான உடலமைப்பும் வேண்டும் என கூறுகிறார்களாம். பல நடிகைகளுக்கு. ஏற்கனவே பாகுபலி நடிகை, ஒரு படத்துக்காக உடல் எடையை அதிகரித்து பிறகு குறைக்க முடியாமல் அவஸ்தைப் பட்டார்.

அதை உதாரணத்துக்குச் சொல்லும் அந்த ஹீரோயின்கள், அந்த விளையாட்டு வீராங்கனையின் பயோபிக்கில் நடிக்கத் தயங்கி நோ சொல்லிவிட்டார்களாம். என்ன செய்வது என்று தவித்து வருகிறது தயாரிப்பு தரப்பு.


ஒரே காரணத்துக்காக அந்த படத்தில் நடிக்க மறுக்கும் முன்னணி ஹீரோயின்கள்..! - அட கொடுமய..! ஒரே காரணத்துக்காக அந்த படத்தில் நடிக்க மறுக்கும் முன்னணி ஹீரோயின்கள்..! - அட கொடுமய..! Reviewed by Tamizhakam on August 05, 2020 Rating: 5
Powered by Blogger.