தமிழில் முன்னணி நடிகருக்கு ஜோடியாக நடிக்க மறுத்த நடிகை அனுஷ்கா..! - இது தான் காரணமாம்..!


ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக இருந்த நடிகை அனுஷ்கா தமிழில் முன்னணி இயக்குனர் கம் ஹீரோவுடன் ஜோடி போட மறுத்துள்ளார். தமிழ் சினிமா மட்டுமில்லாமல், உலக சினிமாவில் கதை பஞ்சம் தலைவிரித்தாடுகின்றது. 

இதனால், ஏற்கனவே ஹிட் ஆன படங்களின் பார்ட் 2, பார்ட் 3 என வண்டியை ஓட்டி வருகிறார்கள். இதில், பழைய படங்களை ரீமேக் செய்வது இன்னொரு வகை. அந்த வகையில், கடந்த, 1983-ம் ஆண்டு வெளியான பாக்யராஜின் முந்தானை முடிச்சு திரைப்படம் ரீமேக் செய்யப்படவுள்ளது. 

37 ஆண்டுகளுக்கு பின் ரீமேக் செய்யப்பட உள்ள பாக்யராஜின் முந்தானை முடிச்சு திரைப்படத்தில் நடிகரும், இயக்குனருமான சசிகுமார் நடிக்க உள்ளார். பாக்யராஜ், ஊர்வசி நடிப்பில் கடந்த 1983-ம் ஆண்டு வெளியான படம் முந்தானை முடிச்சு. ஏ.வி.எம். நிறுவனம் தயாரித்த இந்த படத்தை பாக்யராஜே இயக்கி இருந்தார். 

இளையராஜா இசையமைத்திருந்தார். விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்ற இப்படம், இந்தி, தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது. இந்நிலையில், தற்போது 37 ஆண்டுகளுக்கு பின் ரீமேக் செய்யப்பட உள்ளது. 


இதன் ரீமேக் உரிமையை ஏ.வி.எம். நிறுவனத்திடம் இருந்து ஜே.எஸ்.பி. சதீஷ் ஸ்டூடியோஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இந்த படத்தையும் பாக்யராஜ் தான் இயக்க உள்ளார். இதில் ஹீரோவாக சசிகுமார் நடிக்க உள்ளார்.இந்த படத்தில் நடிக்க நடிகை அனுஷ்காவை அணுகியுள்ளது படக்குழு. 

ஆனால், கோடி ரூபாய் கொடுத்தாலும் முடியாது என மறுத்துவிட்டாராம். திருமணம் செய்யவிருப்பதால் புதிய படங்கள் எதிலும் கமிட்டாகாமல் இருக்கும் அனுஷ்கா. ஹீரோயின் சப்ஜெக்ட் படங்களுக்கு மட்டுமே நடிக்க முடிவு செய்துள்ளதால் தான் மறுத்துவிட்டார் என்று கூறுகிறார்கள். 

இதனால், நடிகை மெகா ஆகாஷ் ஹீரோயினாக ஒப்பந்தமாகியுள்ளார் என நம்ப தகுந்த வட்டாரங்களிடம் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.

தமிழில் முன்னணி நடிகருக்கு ஜோடியாக நடிக்க மறுத்த நடிகை அனுஷ்கா..! - இது தான் காரணமாம்..! தமிழில் முன்னணி நடிகருக்கு ஜோடியாக நடிக்க மறுத்த நடிகை அனுஷ்கா..! - இது தான் காரணமாம்..! Reviewed by Tamizhakam on August 13, 2020 Rating: 5
Powered by Blogger.