"வனிதாவுக்கு அந்த நோய் இருக்குது.." - போட்டு உடைத்த நடிகை கஸ்தூரி..!


வனிதா மூன்றாவது முறையாக பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்து, அதன் பிறகு பீட்டர் பாலின் முதல் மனைவி எலிசபெத் தனக்கு நீதி கேட்டு போலீசில் புகார் அளித்தும் தொடர்ந்து பல்வேறு பேட்டிகளை கொடுத்தும் வருகிறார்.

அவருக்கு சூர்யா தேவி, ரவீந்திரன், லட்சுமி ராமகிருஷ்ணன் ஆகியோர் ஆதரவாக இருந்து வருகின்றனர்.தற்போது கஸ்தூரி எலிசபெத்துக்கு ஆதரவாக இருப்பதாக கூறி ஒரு புதிய யூட்யூப் சேனல் ஆரம்பித்து வனிதாவுக்கு எதிராக பல விஷயங்களை செய்து வருகிறார்.

இதை கண்டு காண்டான வனிதா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கஸ்தூரியை தரக்குறைவாக பேசி பதிவிட்டு வருகிறார்.இதனால பலரும் கஸ்தூரிக்கு ஆதரவாகவும் வனிதாவுக்கு எதிராகவும் பேசி வருவது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் நடிகை கஸ்தூரியிடம் இன்ஸ்டாவில் ஒருவர், ஏன் வனிதா கூட மட்டும் லைவ் வரமாட்டேங்கறீங்க, என பயமா? என்று கேட்டுள்ளார்.அப்போது அதற்கு, “நான் அவரை கூப்பிட்டேன். அவர் என்னுடன் Live வர மறுத்துட்டார்”. என்று கூறியுள்ளார்.

வனிதாவின் YouTube சேனலுக்கு Subscribe பண்ணியிருக்கீங்களா?” அப்புறம் அவங்களோட குக்கிங் வீடியோஸ் பார்ப்பீங்களா? என்று ஒருவர் கேட்டதற்கு, “அதில் இருக்கிற கமென்ட்களை பார்ப்பேன்” என்று பதில் கூறியிருக்கிறார்.

அதேவேளையில் சூர்யா தேவியுடன் நாஞ்சில் விஜயன் இருக்கும் புகைப்படத்தை தனது சமூகவலைதள பக்கத்தில் பதிவிட்ட வனிதா, கையில் மதுக்கோப்பையுடன் இருப்பதுதான் தமிழ் கலாச்சாரமா என்று கேள்வி எழுப்பியிருந்தார். இந்த புகைப்படம் வெளியிடப்பட்ட ஓரிரு நாட்களில் நாஞ்சில் விஜயன் வனிதாவிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டிருக்கும் வனிதா விஜயகுமார், “நாஞ்சில் விஜயன் எனக்கு போன் செய்து பேசினார். நடந்த விஷயங்கள் அனைத்தையும் சொன்னார். அவரை நான் நேரில் சந்தித்தது கூட இல்லை. எனக்கும் அவருக்கும் எந்த பிரச்னையுமில்லை. இவை அனைத்துக்கும் காரணம் சூர்யா தேவிதான். இடையில் கஸ்தூரி உள்ளே புகுந்து இருக்கும் சூழ்நிலையை தவறாக பயன்படுத்தி இருக்கிறார் என்று கூறினார்.


இதனை நடிகை கஸ்தூரி ரீடிவிட் செய்திருந்தார். மேலும் நாஞ்சில் விஜயனின் டிவிட்டுக்கு பதில் கூறிய கஸ்தூரி, தன்னுடைய அனுபவத்தில் வனிதா மேடம் சொன்னதில் போய் தான் அதிகம் என்றும் அது அவருக்கு பொய் சொல்லும் நோய் என்றும் கூறியுள்ளார். மேலும் அந்த டிவிட்டை வனிதாவுக்கும் டேக் செய்துள்ளார்.

"வனிதாவுக்கு அந்த நோய் இருக்குது.." - போட்டு உடைத்த நடிகை கஸ்தூரி..! "வனிதாவுக்கு அந்த நோய் இருக்குது.." - போட்டு உடைத்த நடிகை கஸ்தூரி..! Reviewed by Tamizhakam on August 04, 2020 Rating: 5
Powered by Blogger.