"இந்த ஒரே காரணத்திற்காக என்னை சீரியலில் இருந்து தூக்கிட்டாங்க." - செம்பருத்தி சீரியல் நடிகை கண்ணீர்..!


தமிழில் "செம்பருத்தி" என்ற சீரியல் தான் தற்போது சீரியல் உலகின் ராணி என்று சொல்லாம். ஜீ தமிழில் இந்த சீரியல் ஒளிப்பரப்பாகி வருகிறது. இந்த ஒரு சீரியல் மூலம் சன் டிவி சீரியலுக்கே கடும் போட்டி கொடுத்து வருகின்றனர் ஜீ தமிழ் குழுவினர். 

இந்நிலையில் செம்பருத்தி சீரியலில் முக்கியமாக கதாபாத்திரத்தில் நடித்த பரதா நாய்டு தற்போது சீரியலிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். ஆனால், இவரை வெளியேற்றிய காரணம் இது தான் என அவரே கூறியுள்ளார். 

அதில் நான் திருமணத்திற்கு இரண்டு நாள் முன்பு வரை நடித்துக்கொடுத்தேன். திருமணத்திற்காக விடுமுறை கேட்ட ஒரே காரணத்திற்காக என்னை சீரியலில் இருந்து தூக்கிவிட்டனர் என்று அவர் கூறியுள்ளார். 

மேலும், அந்த சீரியலில் பல பாலிட்டிக்ஸ் உள்ளது, என்றும் சில அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார். இதனைஅறிந்த ரசிகர்கள், இந்த பாலிடிக்ஸ் இல்லாத இடமே இல்லையா என்று விசனம் தெரிவித்து வருகிறார்கள்.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர் ‘செம்பருத்தி’. கார்த்திக் ராஜ், ஷபானா, ப்ரியா ராமன், ஜனனி பரதா நாயுடு உள்ளிட்டோர் இத்தொடரில் நடித்து வருகின்றனர். 

நேற்று இத்தொடரின் ஒளிப்பதிவாளர் அன்பு மரணமடைந்ததை அடுத்து சீரியலில் நடித்தவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்தனர். ஒளிப்பதிவாளர் அன்புவின் மரண செய்தி அறிந்து வீடியோ வெளியிட்டிருக்கும் செம்பருத்தி சீரியல் நடிகை பரதா நாயுடு, “செம்பருத்தி தொடரின் கேமரா மேன் அன்பு காலமாகிவிட்டார் என்ற செய்தி எனக்கு இப்போது தான் கிடைத்தது. 

எனது ஒன்றரை வருட செம்பருத்தி தொடர் பயணத்தில் நிறைய அரசியலைச் சந்தித்தேன். பெரிய போர்க்களமே. அப்போது தனியாக இருந்த எனக்கு ஒளிப்பதிவாளரும், இயக்குநரும் தான் உத்வேகம் அளித்தார்கள். எப்போதுமே எனக்கு உறுதுணையாக இருந்தார். 

சில நாட்களுக்கு முன்னர் தான் அவரிடம் பேசினேன். அவரைப் பற்றி திடீரென இப்படி ஒரு நியூஸ் நான் எதிர்பார்க்கவே இல்லை. சுற்றியிருப்பவர்கள் என்ன பேசினாலும் சாதிப்பதை மட்டுமே யோசி என்று எப்போதும் சொல்வார்.உன்னை தடுக்க நினைக்கிறார்கள் என்றால் நீ ஏதோ ஒன்றை சாதித்துக் கொண்டிருக்கிறாய் என்று கூறுவார். 

உங்களை நான் மிஸ் செய்கிறேன்” இவ்வாறு பரதா நாயுடு தனது வீடியோவில் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.

"இந்த ஒரே காரணத்திற்காக என்னை சீரியலில் இருந்து தூக்கிட்டாங்க." - செம்பருத்தி சீரியல் நடிகை கண்ணீர்..! "இந்த ஒரே காரணத்திற்காக என்னை சீரியலில் இருந்து தூக்கிட்டாங்க." - செம்பருத்தி சீரியல் நடிகை கண்ணீர்..! Reviewed by Tamizhakam on August 18, 2020 Rating: 5
Powered by Blogger.