சூரரை போற்று - ரன்னிங் டைம் மற்றும் சென்சார் முடிவு வெளியானது..!


உலக மக்களை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் காரணமாக, தற்போது அணைத்து படங்களின் படப்பிடிப்பும் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 

போஸ்ட் புரொடக்ஷன் பணிகளுக்கும், சீரியல் பணிகளுக்கும் மட்டுமே அரசு அனுமதி கொடுத்துள்ள நிலையில், சூரரை போற்று படம் குறித்து தற்போது சூப்பர் அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளனர் படக்குழுவினர்.

அரசு தரப்பில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளுக்கு அனுமதி அளித்ததால், சூரரை போற்று படத்தில் சொச்சம், மிச்சம் இருந்த அந்த பணிகளும் தற்போது நிறைவடைந்துள்ளது. 

எனவே மிகவும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகியுள்ள இந்த படம் தீபாவளிக்கு வெளியாகலாம் என்று தகவல் வெளியான நிலையில் கொரோனா பிரச்சனை முடிவுக்கு வருவதை பொறுத்தே திரையரங்கங்கள் திறக்கப்படும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது. 

இறுதி சுற்று படத்திற்கு பிறகு சுதா கொங்கரா நடிகர் சூர்யாவை வைத்து இயக்கியுள்ள படம் சூரரை போற்று. இப்படம் பல உண்மை சம்பவங்களையும், பிரபல நபர் ஒருவரின் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படம் என்றும் நாம் அறிவோம். 

இப்படத்திற்கு முன்னனி இசையமைப்பாளர் ஜி. வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கொரணா தாக்கம் காரணமாக இப்படத்தின் ரிலீஸ் சற்று தள்ளிப்போய் இருக்கிறது. 

மேலும், ஏற்கனவே இப்படத்தில் இருந்து டீஸர் மற்றும் சில பாடல்கள் வெளிவந்து ரசிகர்களை கவர்ந்த இருக்கிறது. சமீபத்தில் கூட இப்படத்தின் சென்சார் சர்டிபிகேட் U சான்றிதழ் வழங்கப்பட்டு வெளியிடப்பட்டது. 

இந்நிலையில் முதன் முறையாக சூரரை போற்று படத்தின் சென்சார் ரிப்போர்ட் வெளிவந்துள்ளது.இதன் படி இந்த படம் 2 மணி நேரம் 33 நிமிடம் ஓடக்கூடியது.

பெரிதாக கத்தரி எதுவும் போடாமல் சில கொச்சையான சொற்களை மட்டும் ம்யூட் அல்லது மாற்றம் செய்து படத்திற்கு "U" சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ளது.


சூரரை போற்று - ரன்னிங் டைம் மற்றும் சென்சார் முடிவு வெளியானது..! சூரரை போற்று - ரன்னிங் டைம் மற்றும் சென்சார் முடிவு வெளியானது..! Reviewed by Tamizhakam on August 11, 2020 Rating: 5
Powered by Blogger.