ஸ்போர்ட்ஸ் ப்ரா - ட்ராக் பேண்ட் - கவர்ச்சி போஸ் கொடுத்து இணையத்தை சூடேற்றிய நடிகை சமந்தா..!
நடிகை சமந்தா முன்னணி நடிகையாக இருந்தாலும், ஆரம்பத்தில் இருந்து தற்போது வரை சினிமாவில் கவர்ச்சி காட்டாமல் நடித்து வருகின்றார்.
பல நடிகைகள் இதுபோன்று கண்ணியம் காத்தாலும், ஒரு சில நடிகைகள் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு பட வாய்ப்புக்காக கவர்ச்சி காட்ட துவங்கி விடுகின்றனர்.
கவர்ச்சி படங்களை தவிர்த்த நடிகை சமந்தா, குடும்ப கதைகளை தேர்ந்தெடுத்து நடித்ததால் வெகு விரைவிலேயே முன்னணி நடிகை எனும் அந்தஸ்தை சமந்தா பெற்றார்.
மேலும், முன்னணி நடிகர்களுடன் ஒன்று சேர்ந்து நடித்ததன் மூலம் சமந்தா பட்டி தொட்டியெங்கும் பிரபலம் அடைந்தார். இதுபோன்று வலம் வந்து கொண்டிருந்த சமந்தாவை நாகார்ஜூனாவின் மகன் நாக சைதன்யா திருமணம் செய்து கொண்டார்.
அதன் பின்னர் பிற மொழி பக்கம் தன்னுடைய திசையை திருப்பி தெலுங்கு, தமிழ் என்று இரண்டு மொழிகளிலும் சிறப்பாக நடித்து வருகிறார்.
சமந்தா தற்போது ஊரடங்கு காலத்தில் வீட்டிலேயே முடங்கி இருக்கின்றார். இருப்பினும் வீட்டில் போரடிக்காமல் இருக்க தனது கணவருடன் இணைந்து மரக்கன்றுகள் நடுவது, உடற்பயிற்சி மேற்கொள்வது, நடனமாடுவது என பல்வேறு வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
தற்போது, எப்போதும் இல்லாத வகையில் சமந்தா கவர்ச்சி காட்டத் துவங்கியுள்ளார். சமீபத்தில் விளம்பரப்படம் ஒன்றிற்கு மிகவும் கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
ஸ்போர்ட்ஸ் ப்ரா - ட்ராக் பேண்ட் - கவர்ச்சி போஸ் கொடுத்து இணையத்தை சூடேற்றிய நடிகை சமந்தா..!
Reviewed by Tamizhakam
on
August 15, 2020
Rating:
