"உங்களுக்கு இன்னும் வயசு ஆகல.!" - வைரலாகும் சினேகாவின் வீடியோ - வியக்கும் ரசிகர்கள்..!


தமிழ் சினிமாவில் என்னவளே என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை சினேகா. இவரை ரசிகர்கள் பெரும்பாலும் சிரிப்பழகி என்று தான் அழைப்பார்கள் அதுமட்டுமல்லாமல் அவர் நடித்த அந்த நேரத்தில் பல்வேறு ரசிகர்களின் கனவு கன்னியாக விளங்கி வந்தார்.

ஒரு காலத்தில் செம்ம மாஸாக நடித்த நடிகை சினேகா பல்வேறு ஹிட்டான திரைப் படங்களை கொடுத்துள்ளார் அந்த வகையில் வசீகரா, ஆட்டோகிராஃப் ,பார்த்தாலே பரவசம், ஏப்ரல் மாதத்தில், உன்னை நினைத்து, ஹரிதாஸ், போன்ற மறக்க முடியாத வெற்றிப்படங்களில் நடித்த சினேகாவிற்கு தற்போது திரைப்பட வாய்ப்புகள் இல்லாமல் இருப்பது பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

அப்பொழுதே இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு மலையாளம் போன்ற பல்வேறு மொழிகளில் தன்னுடைய நடிப்பு திறனை வெளிக்காட்டி ரசிகர்களால் பரவசமாக பேசப்பட்டார். பிறகு பிரபல நடிகர் பிரசன்னாவை திருமணம் செய்து கொண்டு தனது திருமண வாழ்க்கையை வாழ ஆரம்பித்து விட்டார்.

இந்நிலையில் தற்போது தமிழ் சினிமாவில் ஒரு சில முக்கிய கதாபாத்திரத்தில் மட்டும் நடித்துக் கொண்டிருக்கும் நடிகை சினேகா தற்போது தன் உடல் எடையை மிகவும் கணிசமாக குறைத்து இளம் நடிகைகளுக்கு சவால் விடும் அளவிற்கு மாறி வருகிறார்.

இவ்வாறு அவர் உடல் எடையை குறைப்பதற்காக எடுக்கப்பட்ட உடற்பயிற்சி வீடியோ சமூக வலைதளத்தில் மிகவும் வைரலாக பரவி வருகிறது. 


இவ்வாறு அவர் சிறந்த கட்டமைப்புடன் மறுபடியும் வருவதன் காரணமாக மீண்டும் தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்ட் வருவார் என ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வருகிறது.

"உங்களுக்கு இன்னும் வயசு ஆகல.!" - வைரலாகும் சினேகாவின் வீடியோ - வியக்கும் ரசிகர்கள்..! "உங்களுக்கு இன்னும் வயசு ஆகல.!" - வைரலாகும் சினேகாவின் வீடியோ - வியக்கும் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on August 19, 2020 Rating: 5
Powered by Blogger.