புகார் கொடுத்த திரிஷா - தயாரிப்பாளருக்கு "ரெட் கார்டு" போட்ட சங்கம்.! - என்ன பிரச்சனை..?


தமிழ் சினிமாவில் தொடர்ந்து துணை கதாபாத்திரத்தில் நடித்து தற்போது முன்னணி நடிகை என்ற அந்தஸ்தைப் பெற்றவர் தான் நடிகை திரிஷா இவர் தமிழில் முதன்முதலாக சூர்யா நடிப்பில் வெளிவந்த மௌனம் பேசியதே என்ற திரைப்படத்தின் மூலம் தான் கதாநாயகியாக அறிமுகமானார். 

இவ்வாறு இவர் நடித்த முதல் திரைப்படம் மாபெரும் ஹிட்டடித்ததன் காரணமாக இந்த திரைப்படத்தை தொடர்ந்து சாமி, கில்லி, குருவி, பீமா, என முன்னணி நடிகர்களின் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ஆக தற்போது தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு முன்னணி நடிகையாக இருந்து வருகிறார்.

தமிழ் சினிமாவில் தொடர்ந்து குடும்ப கதாபாத்திரம் உள்ள திரைப்படத்தையே தேடித்தேடி நடித்த நடிகை திரிஷா தற்போது கவர்ச்சியை கண்ட மேனிக்கு திரைப்படத்தில் காட்டி வருகிறார். 

இவ்வாறு கவர்ச்சியில் விஸ்வரூபம் எடுத்ததன் காரணமாக தற்போது ரசிகர் கூட்டத்திற்கு அளவே இல்லாமல் போய்விட்டன.இவ்வாறு குடும்ப பாங்காக நடித்த நமது நடிகை தற்போது கவர்ச்சி நடிகை என்று ரசிகர்களால் அழைக்கப்பட்டு வருகிறார். 

இவ்வாறு பிரபலமான நமது நடிகை ஒருவரை காதல் செய்து அவரை திருமணம் செய்து கொள்ள போவதாகவும் பல வதந்திகள் வெளிவந்தன.

தமிழ்மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு மலையாளம் என பல்வேறு மொழியில் நடித்திருந்த நடிகை திரிஷா தற்போது பாலிவுட்டில் நடிக்க ஆசை வந்துவிட்டதாம் இதனால் தனது உடல் எடையை மிகவும் குறைத்து மிகவும் அழகான தோற்றத்தில் இருக்கிறாராம். 

இவ்வாறு அவர் உடல் எடையைக் குறைத்ததன் காரணமாக தமிழ் சினிமாவில் இருந்த பட வாய்ப்புகள் அனைத்துமே பறிபோய் விட்டன.இருந்தாலும், கதாநாயகியை மையப்படுத்தி வரும் கதைகளில் நடித்து வந்தார்.

அந்தவகையில்,இவர் ஹீரோயினாக நடித்த ஹீரோயின் சென்ட்ரிக் படம் ஒன்று இன்னும் வெளியாகாமல் ஹார்ட் டிஸ்கில் தூங்கு கின்றது. ஆனால், திரிஷாவுக்கு இந்த படத்தில் நடித்ததற்காக முழு தொகையும் இன்னும் கொடுக்கப்படவில்லை. 

இதனால்,நடிகை திரிஷா அந்த தயாரிப்பாளரிடம் பல முறை கேட்டும் அவர் தட்டி கழித்து வந்துள்ளார். தயாரிப்பாளரின் இந்த நடவடிக்கையால் கடுப்பான திரிஷா தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்கொடுத்துள்ளார். 

புகாரை விசாரித்த தயாரிப்பாளர் சங்கம், அந்த தயாரிப்பாளர் இந்த பிரச்சனை முடியும் வரை புதிய படங்கள் எதுவும் தயாரிக்க கூடாது என ரெட் கார்டு போட்டுள்ளதாம்.

புகார் கொடுத்த திரிஷா - தயாரிப்பாளருக்கு "ரெட் கார்டு" போட்ட சங்கம்.! - என்ன பிரச்சனை..? புகார் கொடுத்த திரிஷா -  தயாரிப்பாளருக்கு "ரெட் கார்டு" போட்ட சங்கம்.! - என்ன பிரச்சனை..? Reviewed by Tamizhakam on August 19, 2020 Rating: 5
Powered by Blogger.