பிகினி உடையில் கீர்த்தி சுரேஷ் - விட்டு வைக்காத பாலிவுட் மோகம்..! - பெருமூச்சு விட்ட ரசிகர்கள்..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் கீர்த்தி சுரேஷ்,இவர் விஜய், விஷால், சூர்யா, தனுஷ், விக்ரம் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து பிரபலம் அடைந்தார், கடந்த வருடத்தில் கூட நடிகையர் திலகம் படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது வாங்கினார்.

தற்போது ‘தலைவர் 168’ என்னும் ‘அண்ணாத்த’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது ராமோஜி ஃபிலிம் சிட்டியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த படத்தில் பிரகாஷ் ராஜ், மீனா, குஷ்பு, சூரி, சதிஷ் உள்ளிட்ட பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றனர். பொதுவாகவே, தென்னிந்தியாவில் வெற்றி பெற்ற நடிகைகள் ஹிந்தி படங்களில் நடிக்க விரும்பம் காட்டுவார்கள்.

அந்த வகையில், கீர்த்தி சுரேஷிற்கும் பாலிவுட்டில் நடிக்க ஆசை இருந்துள்ளது. இதனை தொடர்ந்து, பாலிவுட் இயக்குனர்களிடம் கதை கேட்டும் வந்துள்ளார். அந்த வகையில், பாலிவுட்டில் முன்னணி இயக்குனர் ஒருவரின் கதைக்கு ஒகே சொல்லியுள்ளார் கீர்த்தி சுரேஷ்.

அதற்காக உடல் எடை குறைத்து ஃபிட்டாகவும் ஆகியுள்ளார். ஆனால், கீர்த்தி சுரேஷ் கமிட்டான அந்த பாலிவுட் படத்தில் பிகினி உடையில் சில காட்சிகள் உள்ளது என்று அதிலும் நடிக்கவேண்டும் என்று கேட்டுள்ளார்கள்.

இந்நிலையில், கீர்த்தி சுரேஷ் பிகினி உடையில் நடிக்கிறார் என்ற தகவல் வைரலாகி ரசிகர்களை ஷாக் ஆக்கியது. ஆனால், இதனை சற்றும் எதிர்பார்க்காத கீர்த்தி சுரேஷ் பிகினி உடையில் நடிக்க முடியாது என அந்த படத்திலிருந்து விலகியுள்ளார்.

இதனால், கீர்த்தி சுரேஷின் ரசிகர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.

பிகினி உடையில் கீர்த்தி சுரேஷ் - விட்டு வைக்காத பாலிவுட் மோகம்..! - பெருமூச்சு விட்ட ரசிகர்கள்..! பிகினி உடையில் கீர்த்தி சுரேஷ் - விட்டு வைக்காத பாலிவுட் மோகம்..! - பெருமூச்சு விட்ட ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on August 06, 2020 Rating: 5
Powered by Blogger.