"இதை தின்றால் பாவி என்றால் நான் பாவியவே இருந்துட்டு போறேன்" - அமலாபால் வெளியிட்ட புகைப்படம்..!


சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான ஆடை திரைப்படத்தில் ஆடை இல்லாமல் நடித்து பெரிதும் சர்ச்சையைக் கிளப்பினார். தமிழ் சினிமாவில் அஜித், விஜய், தனுஷ் ஆகிய முன்னணி ஹீரோக்களுடன் நடித்துள்ளவர் நடிகை அமலாபால்.

இயக்குநர் ஏ.எல். விஜய்யுடனான திருமண வாழ்க்கை விவாகரத்தில் முடிந்ததையடுத்து சினிமா பக்கம் மீண்டும் கவனம் செலுத்தி வருகிறார்.அந்த வகையில், சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான ஆடை திரைப்படத்தில் ஆடை இல்லாமல் நடித்து பெரிதும் சர்ச்சையைக் கிளப்பினார்.

சமீபத்தில் மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்க அமலா பாலிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதற்காக அமலா பாலுக்கு மேக்கப் டெஸ்ட் எடுத்தபோது அது திருப்திகரமாக இல்லாததால் அமலா பாலை சரித்திர படத்திலிருந்து மணிரத்னம் தூக்கியெறிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமலா பால் சமீபகாலமாகத் தனது கவர்ச்சி புகைப்படங்களைத் தனது இன்ஸ்டராகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். பெரும்பாலும் இவை முகம் சுழிக்க வைப்பதாக உள்ளது. இதனால் அவரின் மீது இருந்த இமேஜ் குறிகிய காலத்தில் டேமேஜ் ஆகி இருப்பதால் திரைப்பட வாய்ப்புகள் கைக்கு எட்டுனது வாய்க்கு எட்டாத கதையாகி உள்ளது.

இருந்தாலும் சமூக வலைத்தளங்கள் மூலம் ரசிகர்களின் கண்களில் பட்டுக்கொண்டே இருக்கிறார் அம்மணி. அந்த வகையில், தற்போது தானே செய்த கேக் ஒன்றை காட்டி சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.


மேலும், நொறுக்குதீனி திண்பது பாவம் என்றால் நான் பாவியாவே இருந்துட்டு போறேன் என்று கேப்ஷன் கொடுத்துள்ளார்.

"இதை தின்றால் பாவி என்றால் நான் பாவியவே இருந்துட்டு போறேன்" - அமலாபால் வெளியிட்ட புகைப்படம்..! "இதை தின்றால் பாவி என்றால் நான் பாவியவே இருந்துட்டு போறேன்" - அமலாபால் வெளியிட்ட புகைப்படம்..! Reviewed by Tamizhakam on August 04, 2020 Rating: 5
Powered by Blogger.