"உங்களுக்கு எந்த மாதிரியான பாத்ரூம் வேண்டும்..?" - நடிகை தமன்னாவின் பதிலை பாருங்க..!


நடிகர்கள் அஜித் , சூர்யா, விஜய், விக்ரம், எனப் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து கோலிவுட்டின் கனவு நாயகியாக வலம்வந்தவர் நடிகை தமன்னா. இவர் விஷாலுடன் இணைந்து நடித்திருந்த ஆக்ஷன் திரைப்படம் சமீபத்தில் வெளியானது.

தற்போது நடிகை தமன்னா ‘த நவம்பர் ஸ்டோரி’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த வெப் சீரிஸ் மூலம் டிஜிட்டல் களத்தில் களமிறங்குகிறார். அதேபோல் நடிகை தமன்னா நவாஜூதின் சித்திக் ஹீரோவாக நடிக்கும் படத்தில் நடிக்கவுள்ளார். 

தற்பொழுது தமன்னாவுக்கு பட வாய்ப்புகள் சற்று குறையத் தொடங்கிவிட்டது அதனால் பல நடிகைகள் சினிமா வாய்ப்பு குறைய தொடங்கி விட்டால் போட்டோ ஷூட் நடத்தி புகைப்படத்தை வெளியிடுவார்கள். அந்தவகையில் நடிகை தமன்னாவும் தாவணியில் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். 

தமன்னா, இழந்த மார்க்கெட்டை மீண்டும் பிடிக்க வேண்டும் என்பதற்காக கவர்ச்சி உடையில் புகைப்படங்களை அப்லோடு செய்யும் யோசனையில் இருப்பதாக தகவல். மார்க்கெட் இழந்த நடிகைகள் பலர் வெப் சீரிஸ் பக்கம் நடித்து வருகிறார்கள்.

முன்னணி கதாநாயகியாக வலம் வரும் தமன்னாவும் வெப் சீரிஸில் நடிக்க இருப்பதாக வெளியான தகவல் தற்போது உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. 

இந்நிலையில்,உங்களுக்கு எந்த மாதிரியான பாத்ரூம் வேண்டும் என்ற ஒரு கேள்விக்கு, என்னுடைய படுக்கையறைக்கு அருகில் திறந்தவெளி பாத்ரூம் வேண்டும். அங்கிருந்து பார்க்கும் போது கடல் கண்ணுக்கு தெரியும் தூரத்தில் இருக்க வேண்டும். ஒரு வனப்பகுதியில் தனியாக குளிப்பது போன்று அனுபவம் வேண்டும் என்று பதில் அளித்துள்ளார் தமன்னா.

"உங்களுக்கு எந்த மாதிரியான பாத்ரூம் வேண்டும்..?" - நடிகை தமன்னாவின் பதிலை பாருங்க..! "உங்களுக்கு எந்த மாதிரியான பாத்ரூம் வேண்டும்..?" - நடிகை தமன்னாவின் பதிலை பாருங்க..! Reviewed by Tamizhakam on August 14, 2020 Rating: 5
Powered by Blogger.