காஜல் அகர்வாலுக்கு திருமணம்.? - இவர் தான் மாப்பிள்ளை..! - ரசிகர்கள் ஷாக்..!


தமிழில், பொம்மலாட்டம், நான் மகான் அல்ல, மாற்றான், துப்பாக்கி, பாயும் புலி, ஜில்லா உட்பட பல படங்களில் நடித்திருப்பவர் காஜல் அகர்வால். தமிழ் தவிர, இந்தி, தெலுங்கு படங்களிலும் நடித்துவருகிறார். 

அடுத்து அவர் நடித்துள்ள, பாரிஸ் பாரிஸ் படம் ரிலீஸ் ஆக இருக்கிறது. ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் ஜோடியாக இந்தியன் 2 படத்தில் நடிக்கிறார். இந்தியன் 2ம் பாகத்தில் நடித்து வருகிறார். 

அதன்பிறகு புதிய படம் எதுவும் ஒப்புக்கொள்ளாமல் கால்ஷீட்டை ப்ரியாக வைத்திருந்த காஜல் , தற்போது துல்கர் சல்மான் அவர்களுடன் டான்ஸ் மாஸ்டர் இயக்கும் ஹே சினாமிகா என்கிற படத்தில் நடித்து வருகிறார். 

இந்நிலையில், ​​நடிகை காஜல் அகர்வால் விரைவில் திருமணம் செய்து கொள்வது குறித்து சமீபத்திய சலசலப்பாக உள்ளது . அவரது திருமணம் குறித்த தகவல்கள் அவ்வப்போது வெளிவருகின்றன. 

இந்நிலையில், மும்பையை சேர்ந்த பிரபல அரசியல் வாதியின் மகனும் தொழிலதிபருமான கௌதம் என்பவருடன் நிச்சயதார்த்தம் செய்து கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த சில மாதங்களாக புதிய படங்கள் எதிலும் ஒப்பந்தமாகாமல் இருந்தார் காஜல் அகர்வால். இதற்கான காரணம் இப்போது தெரியாமல் இருந்த ரசிகர்களுக்கு இப்போது இதற்காக காரணம் தெரிய வந்துள்ளது.

திருமணம் செய்து கொள்வதால் படங்களில் ஒப்பந்தம் ஆகாமல் தவிர்த்துள்ளார் அம்மணி. மேலும், திருமணத்திற்கு பிறகு சினிமாவுக்கு முழுக்கு போடவுள்ளாராம் காஜல் அகர்வால். இது அவரது ரசிகர்களை ஷாக் ஆக்கியுள்ளது..

காஜல் அகர்வாலுக்கு திருமணம்.? - இவர் தான் மாப்பிள்ளை..! - ரசிகர்கள் ஷாக்..! காஜல் அகர்வாலுக்கு திருமணம்.? - இவர் தான் மாப்பிள்ளை..! - ரசிகர்கள் ஷாக்..! Reviewed by Tamizhakam on August 17, 2020 Rating: 5
Powered by Blogger.