"அதே குத்து.. அதே கத்து.". - பஞ்சு வாங்குற செலவு மிச்சம் - "வெப்பன்" படம் இதனால் தான் நட்டுகிச்சாம்..!


உருப்படியாக ஒரு ஹிட் படம் கொடுத்து பத்து ஆண்டுகள் மேல ஆகிவிட்டது அந்த வெளிச்சமான ஹீரோவுக்கு. படங்கள் தொடர்ச்சியாக பிளாப் ஆனதால் தயாரிப்பாளர்கள் ஒதுங்கி கொண்டனர். 

இதனால், இரண்டு விரலையும் புஸ் பண்ணி கிருட்டு கிருட்டு கிருட்டு என தன்னுடைய சொந்த பணத்தை போட்டு உறவினர்கள் பெயரில் நிறுவனங்கள் தொடங்கி லாபமோ, நஷ்டமோ நமக்கு நேரம் வரும் போது ஹிட் ஆகும் அதுவரைக்கும் சினிமாவில் நிலைத்திருக்க வருடத்திற்கு ஒரு படம் கொடுத்து விட வேண்டும் என்று முடிவு செய்து பணத்தை வாரி இறைத்தார் வெளிச்சம். 

ஆனால், ஒவ்வொரு அடியும் இடி மாதிரி விழவே வீட்டோடு இருந்த தனது மனைவியையும் படத்தில் நடிக்கும் படி கிளப்பி விட்டு விட்டார். தற்போது, விமான படத்தில் நடித்துள்ள அவர் அந்த படத்தை மலை போல நம்பியுள்ளாராம். 

நிச்சயம் இந்த படம் ஹிட் ஆகும் என ஆவலாக காத்திருந்த அவருக்கு கொரோனாவின் வருகை ஏமாற்றத்தை கொடுத்தது. சென்சார் எல்லாம் முடிந்து விட்ட நிலையில் படம் ரிலீஸ் ஆகாமல் ஹார்டு டிஸ்கில் தூங்கிக்கொண்டிருக்கின்றது. 

இதற்கு நடுவே தன்னுடைய ஆஸ்தான இயக்குனரான டாடா சுமோ இயக்குனரின் இயக்கத்தில் வெப்பன் படத்தில் நடிக்க கமிட்டாக அறிவிப்பு எல்லாம் செய்தார்கள். ஆனால், இப்போது அந்த படம் ட்ராப் ஆகி விட்டது. அதற்கு காரணமும் கொரோனா லாக்டவுன் தான். 

ஏற்கனவே அந்த இயக்குனரின் இயக்கத்தில் அரை டஜன் படத்தில் நடித்தாகி விட்டது. இப்போது தான் இந்த விமான படத்தில் நடித்துள்ளோம். இந்த படத்தை முடித்ததும் மீண்டும் அதே குத்து.. அதே கத்து.. அதே டாடா சுமோ.. அதே ஹெலி கேம் ஷாட்கள்..அதே கிராமத்து ஆயுதங்கள் என்று போனால் நல்லா இருக்காது. 

ஏற்கனவே அவர் இயக்கத்தில் நடித்த படங்களை பார்க்க ரசிகர்கள் காதில் பஞ்சு வைத்துக்கொண்டு தான் போகணும் என்ற விமர்சனம் வேறு இருக்கிறது. வெப்பனை அப்புறம் பாத்துக்கலாம். இப்போதைக்கு, அசுர இயக்குனரின் வித்தியாசமான கதையை கொண்ட வாசல் படத்தை முடிக்கலாம் என்று ஒரு முறைக்கு நான்கு முறை யோசித்து முடிவு எடுத்துள்ளாராம் வெளிச்சம்.

அப்பாடா.. பஞ்சு வாங்குற செலவு மிச்சம்பா

"அதே குத்து.. அதே கத்து.". - பஞ்சு வாங்குற செலவு மிச்சம் - "வெப்பன்" படம் இதனால் தான் நட்டுகிச்சாம்..! "அதே குத்து.. அதே கத்து.". - பஞ்சு வாங்குற செலவு மிச்சம் - "வெப்பன்" படம் இதனால் தான் நட்டுகிச்சாம்..! Reviewed by Tamizhakam on August 11, 2020 Rating: 5
Powered by Blogger.