அதுக்குள்ளே திருமணமா..? - இளம் நடிகையின் திடீர் முடிவு..!


அறிமுகம் ஆன சில படங்களில் முன்னணி நடிகை அந்தஸ்துக்கு பறந்தவர் அந்த சாவி நடிகை. தற்போது, கதை சொல்ல வருபவர்களிடம் கறாரா நோ சொல்லி வருவதாக கோடம்பாக்கத்தில் ஒரு பேச்சு உலா வருகிறது. 

அவர் தற்போது உச்ச நட்சத்திரம் நடித்து வரும் பெரிய படமொன்றில் நடித்து வருகிறார். இந்தப் படத்திற்குப் பிறகு அவர் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டிருப்பதாகவும், அதனால் தான் புதிய படங்களை ஒப்புக் கொள்வதில்லை என்றும் கூறப்படுகிறது. 

திறமையான நடிகை எனப் பேரெடுத்தாலும் சொல்லிக் கொள்வது போல் அவருக்கு வெற்றிப் படங்கள் அடுத்தடுத்து வரவில்லை. இதுவே அவரது இந்த திடீர் முடிவுக்கு காரணம் என்கிறார்கள். 

நடிகைக்கு தொடர்ந்து நடிக்க வேண்டும் என்று தான் ஆசையம். ஆனால், முன்னாள் நடிகையான அவரது அம்மாவும், பிரபல நடிகருமான அவரது அப்பாவும் திருமணம் எல்லாம் காலா காலத்தில் நடக்க வேண்டும் என்றும் இது தான் உனக்கு திருமணம் செய்ய சரியான வயது என்று நடிகையை திருமணம் செய்து கொள்ள கூறுகிறார்களாம்.

ஆனால், இந்தத் திருமணப் பேச்சு எந்தளவிற்கு உண்மை எனத் தெரியவில்லை. காரணம் இன்னும் சில பெரிய படங்களில் நாயகி என நடிகையின் பெயர்தான் அடிபடுகிறது.

நடிகையின் அக்கா கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டு செட்டிலாகி விட்டார். இந்நிலையில், இவருக்கும் விரைவில் திருமணத்தை முடித்து விட வேண்டும் என்று வேண்டுமானால் திருமணத்திற்கு பிறகு நடிப்பை தொடரலாம் என்றும் கூறி சமத்து நடிகையை உதாரணமாக சொல்கிறார்களாம்.

அதுக்குள்ளே திருமணமா..? - இளம் நடிகையின் திடீர் முடிவு..! அதுக்குள்ளே திருமணமா..? - இளம் நடிகையின் திடீர் முடிவு..! Reviewed by Tamizhakam on August 11, 2020 Rating: 5
Powered by Blogger.