"அவள மொதல்ல தொட்டது நான் தான், அவ எனக்கு தான்.." - ஒரு நடிகைக்கு அடித்துகொள்ளும் இரண்டு இயக்குனர்கள்.!


கிட்ட தட்ட 15 ஆண்டுகளுக்கு மேல் தமிழ் சினிமாவில் கவனிக்கப்படும் நடிகையாக இருக்கும் நடிகை இந்த ஃபைவ் நடிகை. பல நடிகர்களின் படத்தில் நடித்திருந்தாலும் முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பெற முடியாமல் போராடி வருகிறார்.

இவருக்கு வெற்றிகரமான நடிகருக்கும் இடையில் காதல், லிவ் இன் டுகெதர் என்ற பேச்சு அடிபட்டது. ஆனால், இருவரும் பிரிந்து விட்டோம் என ஆளுக்கு ஒரு திசையில் சென்று விட்டனர்.

நடிகரின் கட்டுப்பாட்டில் இருந்த போது எந்த படத்திலும் கமிட்டாகாமல் இருந்த நடிகை நடிகரைபிரிந்த பிறகு ஹீரோயின் சென்றிக் படங்களில் நடிக்கும் அளவுக்கு உயர்ந்தார். திருமணம் என்ற பேச்சே கிடையாது என வெறுத்து போய்விட்டார் அம்மணி.

ஆனால், அவரை விட பத்து வயது பெரிய இயக்குனர் ஒருவரும், அம்மணி சினிமாவில் அறிமுகமாக உதவிய ஒரு இயக்குனரும் அவரை திருமணம் செய்து கொள்ள போட்டா போட்டிபோட்டு வருகிறார்கள். இது கோடம்பாக்கதினரை சிரிப்பில் ஆழ்த்தியுள்ளது.

அந்த புள்ளைக்கு என்ன வயசு.. இவங்களுக்கு என்ன வயசாகுது என்று நமட்டு சிரிப்பு சிறிது வருகிறார்கள். இருவரம் நண்பர்கள் என்பதால் அடிக்கடி பார்ட்டி பப் என சுற்றி வந்த இருவரும் இப்போது பிரிந்து விட்டார்களாம்.

நடிகையை திருமணம் செய்து கொள்ள விருப்பம் தெரிவித்து நடிகை நிராகரித்து விட இருவரும் ஏமாந்து போனது தான் மிச்சம். ஆனாலும், கட்டுனா அவள தான் கட்டுவேன் என்று கங்கணம் கட்டிக்கொண்டு சுற்றி வருகிறார்கள்.

இத்தனைக்கு அம்மணியை அறிமுகம் செய்ய உதவிய இயக்குனருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்தும் ஆகி விட்டது. இவருக்கு பத்தாம் வகுப்பு படிக்கும் ஒரு பெண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில், அவள மொதல்ல தொட்டது நான் தான், அவ எனக்கு தான் என்று சவால் விட்டு வருகிறாராம் அவர்.

சினிமாவில் நல்ல இடத்தில் இருக்கும் இந்த இயக்குனர் இப்படி சில்லறைத்தனமாக நடிகையின் பின்னால் சுற்றிவருவதை கண்டு முகம் சுழிக்கிறார்கள் இயக்குனரின் நலம் விரும்பிகள்.

மொட்டை தலைக்கும், முழங்காலுக்கும் முடிச்சு போடா முடியுமா..? என்று என்னைய்யா இப்படி பண்றாங்க என்று சிரிப்பாய் சிரிக்கிறது கோலிவுட் வட்டாரம்.

இதில், இன்னொரு ப்யூட்டி என்னவென்றால் நடிகையும், இயக்குனரும் தமிழ் பிக்பாஸ் சீசன் 4-ல் போட்டியாளராக கலந்து கொள்ள வாய்ப்பு உள்ளதாகவும் இந்த விவகாரம் விரைவில் ஊரே சிரிக்கும்அளவுக்கு அரங்கேறும் எனவும் ஆருடம் கூறுகிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

"அவள மொதல்ல தொட்டது நான் தான், அவ எனக்கு தான்.." - ஒரு நடிகைக்கு அடித்துகொள்ளும் இரண்டு இயக்குனர்கள்.! "அவள மொதல்ல தொட்டது நான் தான், அவ எனக்கு தான்.." - ஒரு நடிகைக்கு அடித்துகொள்ளும் இரண்டு இயக்குனர்கள்.! Reviewed by Tamizhakam on August 05, 2020 Rating: 5
Powered by Blogger.