ப்ப்பா... "வெறித்தனம்.." - வௌவால் போல தலைகீழாக தொங்கியபடி நடிகை அஞ்சலி - வியக்கும் ரசிகர்கள்..!தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக நடித்து வந்தவர் நடிகை அஞ்சலி. தமிழ் திரையுலகில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து வந்த நிலையில், தெலுங்கு திரையுலகிற்கு நடிக்க சென்றார்.

இதற்கு பின்னர் இவரது வாழ்க்கையில் பல விதமான பிரச்சனைகள் ஏற்பட்டது. “அங்காடி தெரு “திரைப்படத்தின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்தவர் நடிகை அஞ்சலி.

அதிக மேக் அப் இல்லை, கவர்ச்சி இல்லை சாதாரணமாக திரைப்படம் முழுவதும் நடித்த அஞ்சலி ரசிகர்களின் நாயகி ஆனார். ஏற்கனவே கற்றது தமிழ் திரைப்படத்திற்காக பில்ம் பேர் விருது பெற்றிருந்த அஞ்சலி அங்காடி தெரு திரைப்படத்திற்காக தமிழ் நாடு ஸ்டேட் அவார்ட், பில்ம் பேர் விருது என குவித்தார்.

அதன் பின் ஏராளமான திரைப்படங்கள் நடித்த இவர் எங்கேயும் எப்போதும் திரைப்படத்திற்காக பில்ம் பேர் விருது பெற்றார். அது மட்டும் இன்றி தெலுங்கு திரைப்படங்களுக்காகவும் பில்ம் பேர் விருது பெற்ற இவர் சினிமாவிற்கு வந்து சில வருடங்களிலேயே பலமுறை பில்ம் பேர் விருது பெற்றவர்கள் வரிசையில் சேர்ந்தார்.

நடிகர் ஜெய்யுடன் கிசுகிசுக்களில் சிக்கிய அஞ்சலி தற்போதும் ஏராளமான திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார். கொரோனா ஊரடங்கில் நான்கு மாதங்களுக்கும் மேலாக சினிமா பிரபலங்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கிறார்கள்.

ஒவ்வொருவரும் அவர்களது பொழுதைப் போக்க என்னென்னவோ செய்து கொண்டிருக்கிறார்கள். சமூக வலைத்தளங்களில் சிலரது வீடியோக்களும், போட்டோக்களும் தான் நிரம்பி வழிகின்றன.

ஒரு சில முன்னணி நடிகைகள் எப்போதோ ஒரு முறைதான் எதையாவது பதிவிடுகிறார்கள். அவர்களில் அஞ்சலியும் ஒருவர். நேற்று இரவு திடீரென இரண்டு போட்டோக்களைப் பதிவிட்டு ஒரு பொன்மொழியை உதிர்த்திருக்கிறார்.


“எல்லா மினுமினுப்பும் மங்கினாலும், அவளது நரம்புகளில் நட்சத்திரம் இருக்கும்,” என பதிவிட்டுள்ளார். நான்கு மாதங்களாக கேமரா முன்னாடி நின்று நடிக்காமல் பலருக்கும் போரடித்துப் போய் இருக்கிறது. சீக்கிரமே படப்பிடிப்பு ஆரம்பமானால் தான் அவர்களுக்கு நிம்மதி.

ப்ப்பா... "வெறித்தனம்.." - வௌவால் போல தலைகீழாக தொங்கியபடி நடிகை அஞ்சலி - வியக்கும் ரசிகர்கள்..! ப்ப்பா... "வெறித்தனம்.." - வௌவால் போல தலைகீழாக தொங்கியபடி நடிகை அஞ்சலி - வியக்கும் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on August 02, 2020 Rating: 5
Powered by Blogger.