பதிவு செய்த புகைப்படங்களை சிறிது நேரத்தில் டெலிட் செய்த திரிஷா - ரசிகர்கள் ஷாக்..!


சமூக வலைத்தளங்களில் இதுவரையிலும் இப்படி யாராவது செய்திருப்பார்களா என்பது சந்தேகமே. ஆனால், த்ரிஷா செய்திருப்பதுதான் ஆச்சரியத்திலும் ஆச்சரியமாக உள்ளது. 

அவரது, இன்ஸ்டாகிராம், டுவிட்டர் கணக்குகளில் உள்ள பதிவுகளில் ஒரு சில முக்கிய பதிவுகைளத் தவிர்த்து மற்ற அனைத்தையும் திடீரென 'டெலிட்' செய்துள்ளார். 

கடந்த சில மாதங்களாகவே அவர் சமூக வலைத்தளங்களில் அதிகமாகப் பதிவிடுவதை நிறுத்திக் கொண்டார். த்ரிஷாவின் காதலர் என்று மீடியாக்களால் கிசுகிசுக்கப்பட்ட 'பாகுபலி' நடிகர் ராணாவுக்கு சமீபத்தில் திருமணம் நடைபெற்றது. 

அவரது திருமணம் நிச்சயம் ஆன போது கூட த்ரிஷா வாழ்த்து எதையும் தெரிவிக்கவில்லை. திருமணத்திற்கும் கூட வாழ்த்து சொல்லவில்லை. அதைப் பற்றி கூட செய்திகள் வெளிவந்தன. 

இந்நிலையில் திடீரென இத்தனை நாட்களாக பதிவு செய்து வந்த தன்னுடைய பழைய புகைப்ப்டங்களை சிறிது நேரத்தில் 'டெலிட்' செய்ததன் காரணம் என்னவென்று தெரியவில்லை. இது திரிஷாவை பின் தொடரும் ரசிகர்களை ஷாக் ஆக்கியுள்ளது.
பதிவு செய்த புகைப்படங்களை சிறிது நேரத்தில் டெலிட் செய்த திரிஷா - ரசிகர்கள் ஷாக்..! பதிவு செய்த புகைப்படங்களை சிறிது நேரத்தில் டெலிட் செய்த திரிஷா - ரசிகர்கள் ஷாக்..! Reviewed by Tamizhakam on August 17, 2020 Rating: 5
Powered by Blogger.