"அந்த மாதிரி காட்சி..." - இயக்குனரிடமே நேரடியா கேட்பேன் - விடவே மாட்டேன் - ராஷிகண்ணா ஓப்பன் டாக்..!

ராஷி கண்ணா, தமிழில் முதலில் நடித்த, சைத்தான் கா பச்சா படம் வெளியாகும் முன், இமைக்கா நொடிகள், அடங்க மறு என, அடுத்தடுத்து படங்கள் ஒப்பந்தமாகின. 
 
ஆனால், அதற்குப்பின், சிறு இடைவெளி ஏற்பட்டது. உடனே, தன் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டார். இதையடுத்து, புதிய வாய்ப்புகள் வந்தன. ஆனால், 'இவ்வளவு கவர்ச்சியாக, 'போஸ்' கொடுக்க வேண்டுமா?' என, பலரும் கேள்வி எழுப்பினர். அவரோ, ''கவர்ச்சி என்பது, பார்ப்பவர் கண்களில் இருக்கிறது,'' என, காலங்காலமாய் சொல்லப்படும் விளக்கத்தை, பதிலாக கொடுக்கிறார். 
 
தொடர்ந்து பேசிய அவர், கதாநாயகியாக முக்கிய இடத்துக்கு போய் விட்டேன். இந்த நிலையில் நான் நடிக்கிற படங்கள் எனது கதாபாத்திரம் மூலமாக எனக்கு ஒரு மரியாதையை கொண்டு வருவதாக இருக்க வேண்டும் என்பதில் கவனமான இருக்கிறேன். 
 
கவர்ச்சியில் எல்லை மீற மாட்டேன். பெண்கள் கதாபாத்திரங்களை இழிவுபடுத்தி காட்டினால் பொறுத்துக்கொள்ள மாட்டேன். அந்த மாதிரி காட்சிகள் வைத்தால் பெண்களை இழிவுபடுத்தும் இந்த காட்சி தேவையா, என்று இயக்குனர்களிடம் நேரடியாகவே கேட்டு விடுவேன். 
 
சில நேரம் எனது கருத்தை ஏற்றுக் கொள்வார்கள். சில நேரம் கதைக்கு தேவை என்று வாக்குவாதம் செய்வார்கள். எது எப்படி இருந்தாலும் எனது கருத்தை சொல்லாமல் விடவே மாட்டேன்.” ரொம்ப நாட்களாக தெலுகு நடிகர்கள் இவரை பொத்தி பொத்தி பாதுகாத்து வந்தனர். 
 
தமிழ் பக்கம் தலைகாட்டாமல் தெலுங்கு படங்களில் நடித்து வந்த ராஷி கண்ணா தமிழில் வாய்ப்பு வந்ததும் தொடர்ந்து தமிழ் படங்களில் கமிட்டாகி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

"அந்த மாதிரி காட்சி..." - இயக்குனரிடமே நேரடியா கேட்பேன் - விடவே மாட்டேன் - ராஷிகண்ணா ஓப்பன் டாக்..! "அந்த மாதிரி காட்சி..." - இயக்குனரிடமே நேரடியா கேட்பேன் - விடவே மாட்டேன் - ராஷிகண்ணா ஓப்பன் டாக்..! Reviewed by Tamizhakam on August 08, 2020 Rating: 5
Powered by Blogger.