கொள்கைகளை தளர்த்தி இதுவரை இல்லாத அளவுக்கு கவர்ச்சியில் கீர்த்தி சுரேஷ் - வாயை பிளந்த ரசிகர்கள்..!
கேரளத்து வரவான கீர்த்தி சுரேஷ் குறைந்த நாட்களில் முன்னணி ஹீரோக்களுடன் நடித்து பிரபல நடிகையாக வலம் வருகிறார். அதுமட்டுமல்லாமல் தேசிய விருதையும் பெற்று சிறந்த நடிகை என்பதையும் நிரூபித்துள்ளார்.
இதனிடையே பாலிவுட்டில் நடிக்க அவர் தன் உடல் எடையை குறைத்தார். அதனால் பெரிதாக பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. தெலுங்கில் மட்டும் இரண்டு படங்கள் கைவசம் உள்ளன.
இந்நிலையில் குட்லக் சகி என்ற படத்தில் கதையின் நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். அவர் கதையின் நாயகியாக நடிக்க ஆர்வம் உடையவர். குட்லக் சகி தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் வெளியாக உள்ளது. இதில் கீர்த்தி சுரேஷிற்கு ஜோடியாக ஆதி நடித்துள்ளார்.
வட மாநிலத்தின் பின் தங்கிய கிராமத்தில் இருந்து தேசிய அளவில் சுப்பாக்கிச்சுடும் போட்டியில் வெற்றி பெறும் பெண்ணின் கதையே குட்லக் சகி. இதில் கீர்த்தி சுரேஷ் அச்சு அசலாக அப்படியே வட இந்திய பெண்ணாக மாறியுள்ளார்.
மலையாளத்தில் கீதாஞ்சலி எனும் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இதன்பின் ஏ.எல். விஜய் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடித்து வெளியான இது என்ன மாயம் படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானார்.
இதனை தொடர்ந்து சிவகார்த்திகேயன், தனுஷ், விஜய், சூர்யா, விக்ரம் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து தற்போது தமிழ் திரையுலகில் ஒரு முன்னணி நடிகையாக விளங்கி வருகிறார்.
மேலும் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடித்து வரும் அண்ணாத்த படத்தில் மிகவும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
ஆரம்பத்தில் கீர்த்தி சுரேஷிற்கு இருந்த மவுசு இப்போது குறைந்து விட்டது என்பது தான் உண்மை. இதனால், புதிய படங்களில் இவரை ஒப்பந்தம் செய்ய இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் தயக்கம் காட்டி வந்தனர். பொசு பொசு என இருந்த இவர் உடல் எடை குறைத்து ஒல்லியாக மாறிவிட்டதும் இதற்கு ஒரு காரணமாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில், தன்னுடைய கொள்கைகளை தளர்த்தி கிளாமர் கதாத்பாத்திரங்களை ஏற்று கவர்ச்சி காட்டி நடிக்க முடிவு செய்துள்ள கீர்த்தி சுரேஷ், அடுத்தடுத்த படங்களில் இதுவரை இல்லாத அளவுக்கு கவர்ச்சியை கட்டவிழ்த்து விடுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தகவலை கேட்ட அவரது ரசிகர்கள் வாயை பிளந்துள்ளனர்.
கொள்கைகளை தளர்த்தி இதுவரை இல்லாத அளவுக்கு கவர்ச்சியில் கீர்த்தி சுரேஷ் - வாயை பிளந்த ரசிகர்கள்..!
Reviewed by Tamizhakam
on
August 19, 2020
Rating:
