சொல்லாமல் கொள்ளாமல் ஆளை மாற்றிய படக்குழு - அப்செட்டில் இளம் நடிகை..!


தொலைக்காட்சி சீரியலை பொறுத்த வரை சிக்கலான ஒரு விஷயம் உண்டு என்றால் அது கதை ஆரம்பிக்கும் போது ஒரு கதாபாத்திரத்தை ஏற்றுக்கொண்ட நடிகர்கள் அந்த சீரியல் முடியும் எந்த வம்பு வழக்கு, சண்டை சச்சரவு இல்லாமல் நடித்து முடிப்பது தான்.

பெரும்பாலும் நடிகர், நடிகைகள் சம்பளம் மற்றும் கருத்து வேறுபாடு காரணமாக சீரியலை விட்டு வெளியேறி படகுழுவிற்கு தலைவலியை கொடுத்து விடுவார்கள். இதனால், உடனடியாக இன்னொருவரை அழைத்து அவரை நடிக்க வைக்க வேண்டும்.

வெகு சில நடிகைகள் மட்டுமே குடும்பம் அல்லது மருத்துவ விடுப்பு எடுத்து விட்டு செல்வார்கள். அப்படி இருப்பவர்களையும் நிரந்தரமாகவே நீக்கிவிடுவார்கள்.

ஆனால், தற்போது கொரோனா லாக்டவுன் சீரியல் துறையை திருப்பி போட்டுள்ளது. குறைந்த பட்ச ஆட்களே வேலைக்கு வர வேண்டும் என்பதால் வேலைப்பளு அதிகம்.

படப்பிடிப்புக்கு வர மறுப்பதாலும், சிலர் வர முடியாத சூழலில் சிக்கி இருப்பதாலும் பல சீரியல்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தவர்களை மாற்றி விட்டார்கள்.

அதில் கன்னடத்து நடிகையும் ஒருவர். நடிகையின் அழகிற்காகவே அந்த சீரியலைப் பார்த்தவர்கள் ஏராளம். சமூகவலைதளத்திலும் அவருக்கு ரசிகர்கள் அதிகம்.

தயாரிப்பாளர்கள் அழைத்த போது, தற்போது அவரால் சீரியல் படப்பிடிப்பில் கலந்து கொள்ள இயலவில்லையாம். இதனால் அவரிடம் முறைப்படி சொல்லாமலேயே அவர் கதாபாத்திரத்தில் வேறொருவரை நடிக்க வைத்து விட்டனர்.

ஏறக்குறைய இருவரது பெயருமே ஒரே மாதிரி தான் இருக்கும். தாமதமாகத் தான் இந்த விசயம் பழைய நடிகைக்கு தெரிய வந்திருக்கிறது. 'இதை என்னிடமே சொல்லி இருக்கலாமே.. ஏன் இப்படி செய்தார்கள்?' என பார்ப்பவர்களிடம் எல்லாம் புலம்பி வருகிறாராம் நடிகை.

சொல்லாமல் கொள்ளாமல் ஆளை மாற்றிய படக்குழு - அப்செட்டில் இளம் நடிகை..! சொல்லாமல் கொள்ளாமல் ஆளை மாற்றிய படக்குழு - அப்செட்டில் இளம் நடிகை..! Reviewed by Tamizhakam on August 03, 2020 Rating: 5
Powered by Blogger.