இனி இது தொடர்ந்தால் நடிக்க விட மாட்டேன் - மனைவியிடம் காதல் கணவர் கறார்..!


கல்யாணத்துக்கு பிறகும் தொடர்ந்து படங்களில் நடிக்க முன்னணி நடிகைக்கு வருடைய காதல் கணவர் முக்கியமான இரண்டு கண்டிசன்களைப் போட்டுள்ளாராம். படங்களில் ஆகட்டும், பொது நிகழ்ச்சிகளுக்கு ஆகட்டும் தாராளமாக கவர்ச்சி காட்டி உடை அணிந்து வருபவர் அந்த பிரபல நடிகை. 

சுற்றுலா செல்லும் இடங்களில் இருந்தும்கூட தனது கவர்ச்சிப் படங்களைப் பதிவேற்ற அவர் மறப்பதில்லை. மாமனார், மாமியார் என குடும்பமாக போகும் போது கூடவா இப்படி டிரெஸ் போடுவார் என ரசிகர்களே அவரை திட்டிய சம்பவங்களும் உண்டு. ஆனால் அதைப் பற்றியெல்லாம் நடிகை கவலைப் படுவதேயில்லை. 

எப்போதும் தனக்கு பிடித்த மாதிரி தான் ஆடை அணிந்து வருகிறார். திருமணத்திற்குப் பிறகும் தன்னை மாற்றிக் கொள்ளவில்லை நடிகை. தொடர்ந்து கவர்ச்சியாக உடை அணிவதோடு, சமீபகாலமாக தனது படங்களிலும் நாயகர்களுடன் நெருக்கமாக நடித்து வருகிறார். 

இதனாலேயே திருமணத்திற்குப் பிறகும் அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. வேறெந்த நடிகையும் திருமணத்திற்கு பிறகு காணமால் போய் விடுகிவார்கள். ஆனால், நான் இன்னும் கன் மாதிரி நடிச்சுட்டு இருக்கேன் இது எந்த நடிகைக்கும் கிடைக்காத சிறப்பாக இதனை பெருமையாக கருதி வருகிறார் நடிகை.

ஆனால், இந்த விவகாரத்தில் நடிகையின் காதல் கணவருக்கு கொஞ்சம் வருத்தம் தானாம். மனைவி இப்படி குடும்பப் பெயரைக் கெடுக்கும் வகையில் கவர்ச்சியாக உடை அணிவதை அவர் விரும்பவில்லையாம். எனவே, நடிகைக்கு அவர் முக்கியமான இரண்டு கண்டிசன்களைப் போட்டுள்ளாராம்.

அதாவது, இனி பொது இடங்களுக்காகட்டும், படங்களில் ஆகட்டும் ஓவர் கவர்ச்சியான உடைகள் கூடாது என்பது தான் அது. அப்படி இந்த கண்டிசன்களுக்கு ஒத்துக் கொண்டால் மட்டுமே மேற்கொண்டு படங்களில் நடிக்கலாம். இல்லையென்றால் நடிப்பிற்கு பை பை சொல்லிவிட வேண்டியது தான் என கறாராக கூறி விட்டாராம்.

நடிகையும் தொடர்ந்து நடிக்கும் ஆசையில் கணவரின் இந்த கண்டிசன்களுக்கு ஓகே சொல்லி விட்டாராம். எனவே இனி குடும்பப்பாங்கான வேடங்களில் தான் நடிகை நடிப்பார் எனக் கூறப்படுகிறது. அதோடு பொது நிகழ்ச்சிகளுக்கும் அடக்கஒடுக்கமாக ஆடை அணிந்து வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால், நடிகையிடம் பெரும்பாலான ரசிகர்களுக்குப் பிடித்ததே இப்படி அவர் ஆடை அணிவது தான். அதனால் தான் திருமணத்திற்குப் பிறகும் நடிகைக்கு படவாய்ப்புகள் கிடைத்து வருகின்றன. இந்த சூழ்நிலையில் கணவரின் கெடுபிடியால் ரசிகர்களின் ஆதரவு கிடைக்காமல் போய் விடுமோ என்ற கவலையில் இருக்கிறாராம் நடிகை.

இந்நிலையில், நடிகரின் நெருங்கிய உறவினரின் இல்ல திருமணம் விழாவில் கலந்து கொள்ள வந்தவர் புடவை சகிதமாக இழுத்துப்போத்திக்கொண்டு வந்திருந்தார் என்பது குறிப்பிடதக்கது.

இனி இது தொடர்ந்தால் நடிக்க விட மாட்டேன் - மனைவியிடம் காதல் கணவர் கறார்..! இனி இது தொடர்ந்தால் நடிக்க விட மாட்டேன் - மனைவியிடம் காதல் கணவர் கறார்..! Reviewed by Tamizhakam on August 20, 2020 Rating: 5
Powered by Blogger.