வெளியானது கைலாசா நாட்டின் கரன்ஸி - இதோ புகைப்படம்..!


இந்தியாவில் தேடப்படும் குற்றவாளி பட்டியலில் உள்ள நித்தியானந்தா எங்கு இருக்கிறார் என்பது எந்த காவல் அமைப்புகளுக்கும் தெரியவில்லை. இதற்கிடையே நித்தியானந்தா தான் கைலாசா என்ற நாட்டை உருவாக்கி அங்கு வாழ்ந்து வருவதாக அவரே வீடியோ வெளியிட்டார்.

இதுகுறித்து நடந்த ஆய்விலும் இந்திய அதிகாரிகள் குறிப்பிடும் வகையில் எதையும் கண்டறியவில்லை. ஓரு ஆண்டுக்கு மேலாக அதிகாரிகள் நித்தியானந்தாவைத் தேடி வரும் நிலையில், செய்திகளுக்குப் பேட்டி அளிப்பது, வீடியோக்கள் வெளியிடுவது, கைலாசா நாடு குறித்து அறிவிப்புகளை வெளியிடுவது உள்ளிட்டவற்றை அவர் வாடிக்கையாக கொண்டிருந்தார். 

இந்த சூழலில் இப்போது கைலாசாவின் கரண்சி தயார் எனக் கருத்து ஒன்றை வெளியிட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. நமக்கு கிடைத்த தகவலின்படி, “விநாயகர் சதுர்த்து தினத்தன்று ரிசர்வ் பேங்க் ஆஃப் கைலாசா, கைலா பணம் உள்ளிட்டவை அறிமுகம் செய்யப்படும். வாடிகன் பேங்கை மையமாக வைத்து இந்த ரிசர்வ் பேங்க் ஆஃப் கைலாசா செயல்படும். 

வெளிநாட்டு பரிவர்த்தனைக்கு எனத் தனியாக ஒரு பணமும் வடிவமைக்கப்பட்டுள்ளது. 300 பக்கத்தில் நாட்டின் பொருளாதார கொள்கையும் தயாராக உள்ளது” எனக் கூறப்படுகிறது.

இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி, வரும் 22ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையடுத்து நித்தியானந்தாவைக் கைது செய்ய அரசு என்ன நடவடிக்கை மேற்கொள்ளும் என்ற கேள்வி எழுந்துள்ளது. 

இதற்கிடையே நித்தியானந்தா தெற்கு அமெரிக்கா, ஈக்வேடார் பகுதியில் உள்ள ஒருத் தீவில் இருப்பது தெரியவந்தது. முன் தனது நாட்டின் கொடியை அறிமுகப்படுத்திய நித்தியானந்தா, அனைத்து துறை ரீதியாக கட்டமைப்புகளை உருவாக்கி வருவதாக முன்பு குறிப்பிட்டிருந்தார். 

இந்த சூழலில் பொருளாதார கொள்கையை தயார் செய்து அதை அவர் வெளியிட தயாராக இருக்கிறார் என்பது இணையத்தில் இப்போது பேசுப் பொருளாக மாறியது.


இந்நிலையில், இந்த நாட்டின் ரூபாய் தாளின் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. இதில், தமிழ் ஆங்கிலம் என இரண்டு மொழிகள் மட்டுமே இடம் பெற்றுள்ளன.

வெளியானது கைலாசா நாட்டின் கரன்ஸி - இதோ புகைப்படம்..! வெளியானது கைலாசா நாட்டின் கரன்ஸி - இதோ புகைப்படம்..! Reviewed by Tamizhakam on August 15, 2020 Rating: 5
Powered by Blogger.