"கவர்ச்சியை குறைக்க சொன்னால் ட்ரெஸ்-ஐ குறைச்சிடீங்களே.." - இளசுகளை சூடேற்றிய இலியானா..!


நண்பன் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்தவர் இலியானா. முன்னதாக இவர் கேடி என்ற படத்தில் தமிழில் அறிமுகமானார். இதற்கிடையில் தெலுங்கு படங்களில் நடித்து முன்னணி நடிகை வரிசையில் இடம் பிடித்தார். 

டாப் ஹீரோக்களுடன் ஜோடி போட்டு வந்த நிலையில் அவருக்கு யாரோ பாலிவுட் ஆசை காட்ட 2012 ம் ஆண்டு தமிழ், தெலுங்கு படங்களுக்கு முழுக்கு போட்டுவிட்டு பெட்டி படுக்கையைக் கட்டிக்கொண்டு இந்தியில் நடிக்கச் சென்றார். ரன்பீர் கபூருடன் நடித்த பர்பி படம் சூப்பர் ஹிட் ஆனது. 

முதல் படமே ஹிட்டானதால் அடுத்தடுத்து இந்தியில் படம் வந்தது. இதையடுத்து மும்பையிலேயே செட்டிலானார். அதன்பிறகு தென்னிந்தியப் படங்கள் பக்கம் திரும்பிப் பார்க்கவில்லை.பாலிவுட்டில் வாரிசு நடிகர்கள் தவிரப் பிற நடிகர், நடிகைகளுக்கு அங்கு வாய்ப்பு கிடைக்காது என்ற உண்மை சுஷாந்த் மறைவுக்குப் பிறகு தற்போது தெரிய வந்திருக்கிறது. 

அது தெரியாமலே இலியானாவும் வாய்ப்புகளுக்காகக் காத்திருக்க வந்த வாய்ப்பெல்லாம் வெறும் சொத்தையாக இருந்தது. எவ்வளவு வேகமாக முதல் படத்தில் ஜெயித்தாரோ அதே வேகத்தில் வீழ்ச்சி அடைந்தார். அவருக்கு இந்தியில் பெரிதாகச் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு வாய்ப்பு வரவில்லை.

2020ம் ஆண்டில் கவர்ச்சியாக நடிக்கும் புதிய பாலிசியுடன் களம் இறங்கினார் இலியானா. ஆனால் கொரோனா லாக் டவுன் அவரது கனவைக் கலைத்து விட்டது. லாக்டவுனில் உடல் எடை பெருகி விடக் கூடாது என்பதற்காகக் கடுமையான பயிற்சிகள் செய்து பழைய தோற்றத்துக்கு உடலை ஸ்லிம்மாக்கி இருக்கிறார். 

அதை இயக்குனர்கள் கண்களுக்குப்படும் படி இறுக்கமான உடை அணிந்து டாப் ஆங்கிளில் படம் எடுத்து தினமும் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வருகிறார். அவரது படங்களை பார்க்கும் ரசிகர்கள் கவர்ச்சியை கொஞ்சம் குறையுங்கள் என்று கூறிவந்தனர்.


ஆனால், அதனைதவறாக புரிந்து கொண்டு இலியானா உடையை குறைத்து இன்னும் கவர்ச்சி தூக்கலாக புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

"கவர்ச்சியை குறைக்க சொன்னால் ட்ரெஸ்-ஐ குறைச்சிடீங்களே.." - இளசுகளை சூடேற்றிய இலியானா..! "கவர்ச்சியை குறைக்க சொன்னால் ட்ரெஸ்-ஐ குறைச்சிடீங்களே.." - இளசுகளை சூடேற்றிய இலியானா..! Reviewed by Tamizhakam on August 16, 2020 Rating: 5
Powered by Blogger.