அந்த ஹீரோவா..? - ஆளை விடுங்கடா சாமி..! - தலை தெறிக்க ஓட்டம் பிடிக்கும் நடிகைகள்..!


பிரபல ஹீரோ ஒருவருடன் நடித்தால் வாழ்க்கையே போய்விடும் என்று முன்னணி நடிகைகள் அவருடன் நடிக்கும் வாய்ப்புகளை உதறிவிட்டு ஓட்டம் பிடித்து வருகிறார்கள். 

தமிழில் முன்னணியில் இருக்கும் நடிகர் அவர்.தனது படம் வெளியானாலும், ஆகாவிட்டாலும் எப்போது போல அவர் கெத்தாக வலம் வருவார். அவருக்கு இருக்கும் ரசிகர்கள் எப்போதும் அவருக்கு ஆதரவாக இருப்பார்கள்.

கஷ்டமான காலத்தில் கூட அவருக்கு ரசிகர்களின் ஆதரவு இருக்கும்.ஆனால் ஒரு படம் எடுத்து வெளியிடுவதற்குள் அவர் நிறைய கஷ்டப்படுவார் . கடந்த சில மாதங்களாக அவர் நடித்த படம் எதுவும் வெளியாகவில்லை. தற்போது அவர் நடித்து வரும் படத்திற்கும் சரியாக ஷூட்டிங் செல்வதில்லை.

இவர் நடிக்கும் படங்களில் பெரிதாக ஹீரோயின் பாத்திரங்களுக்கு முக்கியத்துவம் இருக்காது. அப்படியே இருந்தாலும் அது பெரிதாக ரீச் ஆகாது. இந்த நிலையில் அந்த ஹீரோவுடன் நடிக்க முன்னணி ஹீரோயின்கள் தற்போது தயக்கம் காட்டி வருகிறார்களாம்.

ஆம், அவருடன் நடித்த பெரும்பாலனா ஹீரோயின்கள் அதன்பின் சினிமாவில் வாய்ப்பு கிடைக்காமல், அடையாளமே தெரியாமல் போய்விட்டனர். எவ்வளவு தான் நன்றாக நடித்தாலும் அவர்களுக்கு அதுதான் கடைசி படமாக இருக்கிறது. 

அவருடன் நடிக்கும் படம் ஹிட் ஆனாலும் கூட அதன்பின் வாய்ப்பு கிடைப்பதில்லை. முன்னணியில் இருந்த பல ஹீரோயின்கள் இப்படி வாய்ப்பை இழந்து உள்ளனர்,என்று கூறி வருகிறார்களாம். 

இதனால், அவரின் படத்தில் சமீப நாட்களில் எல்லாம் இந்த விவரம் தெரியாத புது ஹீரோயின்களை போடவே முடிவு எடுத்துள்ளாராம்.

அந்த ஹீரோவா..? - ஆளை விடுங்கடா சாமி..! - தலை தெறிக்க ஓட்டம் பிடிக்கும் நடிகைகள்..! அந்த ஹீரோவா..? - ஆளை விடுங்கடா சாமி..! - தலை தெறிக்க ஓட்டம் பிடிக்கும் நடிகைகள்..! Reviewed by Tamizhakam on August 20, 2020 Rating: 5
Powered by Blogger.