இணையத்தில் தீயாக பரவிய புகைப்படங்கள் - அது, படத்திற்காக எடுக்கபட்டது என கூறும் ரம்யா நம்பீசன்..!


ஒரு மலையாள படத்தின் மூலம் அறிமுகமான ரம்யா நம்பீசன் நடிக்க தொடங்கி நீண்ட இடைவேளைக்கு பின் தமிழில் ஒரு நாள் கனவு படத்தில் ஒரு துணை கதாபாத்திரத்தில் அறிமுகம் ஆனார். 

தொடர்ந்து இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் பிஸ்ஜா படத்தில் நடித்த இவருக்கு அந்த படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி படமாக அமைந்தது. 

தொடர்ந்து இவர் நடித்த நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும் மற்றும் டமால் டுபீல் படங்கள் தோல்வி படங்களாக அமைந்தாலும் அடுத்து வெளியான சேதுபதி மற்றும் சைத்தான் படங்கள் ஓரளவு வெற்றி படங்களாக அமைந்ததால் தற்போது ராமயா நம்பீசன் தமிழிலில் குறிப்பிடத்தக்க நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார். 

தமிழில் கதாநாயகியாக கடைசியாக சிபிராஜுடன் சத்யா படத்தில் நடித்தார். இந்த படமும் இவருக்கு வெற்றி படமாக அமைந்தது.தமிழில் இவருக்கு கடைசியாக மெர்குரி படம் வெளியானது. விரைவில் இவர் நடிப்பில் வெளியாக இருக்கும் சீதக்காதி படத்திற்கான போஸ்ட் ப்ரொடக்சன் வேலைகள் தற்போது நடந்து வருகிறது. 

தற்போது ரியோ அவர்களுடன் பிளான் பண்ணி பண்ணனும் படத்தில் நடித்துள்ளார். தொடர்ந்து குடும்பப் பாங்கான கதாபாத்திரங்களில் நடித்த ரம்யா நம்பீசன், மலையாளத்தில் வெளியான சப்பா குரிஷு படத்தில் நஸ்ரியா கணவர் ஆன பகத் ஃபாசிலோடு லிப் லாக் காட்சியில் நடித்து ரசிகர்களை கிக் ஏற்றினார். 

இப்போது அடுத்தடுத்து முன்னணி நாயகிகளுக்கு திருமணம் நடந்து வருகிறது. அண்மையில் ரம்யா நம்பீசன் தனது டுவிட்டர் பக்கத்தில் கல்யாண கோலத்தில் இருக்கும் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். 

இணையத்தில் தீயாய் பரவிய அந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் உங்களுக்கு திருமணம் ஆகிவிட்டதா..? எப்போ நடந்தது.? யாரு மாப்பிள்ளை என கேள்விகளால் அவரை துளைத்தெடுக்க ஆரம்பித்து விட்டனர். 


இந்நிலையில், அந்த புகைப்படங்களை மீண்டும் பகிர்ந்துள்ள அவர், திருமணம் முடிந்துவிட்டதா?, எப்போது கல்யாணம்? இல்லவே இல்லை. இது ஒரு படத்துக்காக எடுக்கப்பட்ட புகைப்படம் என பதிலளித்துள்ளார்.

இணையத்தில் தீயாக பரவிய புகைப்படங்கள் - அது, படத்திற்காக எடுக்கபட்டது என கூறும் ரம்யா நம்பீசன்..! இணையத்தில் தீயாக பரவிய புகைப்படங்கள் - அது, படத்திற்காக எடுக்கபட்டது என கூறும் ரம்யா நம்பீசன்..! Reviewed by Tamizhakam on August 13, 2020 Rating: 5
Powered by Blogger.