பிக்பாஸ் 4-ல் பங்கேற்ற ஒரு கோடி ரூபாய் சம்பளம் பெரும் முதல் தமிழ் நடிகை - செம்ம அப்டேட்..!

 
ஒவ்வொரு ஆண்டும் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிகழ்ச்சியில் பெரும்பாலும் திரைத்துறையைச் சார்ந்த பிரபலங்களே அதிகம் பங்கேற்று வருகின்றனர். 
 
கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் 100 நாட்கள் ஒரே வீட்டில் வெளி உலக தொடர்பின்றி இருக்க வேண்டும். இறுதியில் மக்கள் அளிக்கும் வாக்குகளின் அடிப்படையில் ஒருவர் வெற்றியாளராக தேர்வு செய்யப்படுவார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கென தனி ரசிகர் பட்டாளமே உண்டு. 
 
தமிழில் முதல் மூன்று சீசன்களை தொகுத்து வழங்கிய நடிகர் கமல்ஹாசன் பிக்பாஸ் 4 நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்க இருக்கிறார். அதற்கான புரமோ சமீபத்தில் வெளியிடப்பட்டது. விரைவில் போட்டியாளர்களின் விவரங்கள் மற்றும் ஒளிபரப்பு தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
தற்போது கிடைத்த தகவல்கள் படி அக்டோபர் 4-ம் தேதி இந்த நிகழ்ச்சி தொடங்கப்படும் என தெரிகின்றது. இந்த நிகழ்ச்சியின் வேலைகளில் தீவிரம் காட்டி வருகிறார்கள் பட குழுவினர். இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளவர்கள் பற்றி, யூகிப்பின் அடிப்படையில் சில பிரபலங்களின் பெயருடன் கூடிய ஒரு லிஸ்ட், சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது.
 
ஆளாளுக்கு ஒரு லிஸ்டை பகிர்ந்து கொண்டு தங்களுடைய எதிர்பார்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், இஸ்பெட் ராஜாவும் இதய ராணியும் படத்தில் நடித்த நடிகை ஷில்பா மஞ்சுநாந் அவர்களை பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றஅழைத்துள்ளார்கள் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
 
 
இதற்காக இவருக்கு ஒரு கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டுள்ளது என கூறுகிறார்கள்.

பிக்பாஸ் குறித்த அப்டேட்டுகளுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள்.

பிக்பாஸ் 4-ல் பங்கேற்ற ஒரு கோடி ரூபாய் சம்பளம் பெரும் முதல் தமிழ் நடிகை - செம்ம அப்டேட்..! பிக்பாஸ் 4-ல் பங்கேற்ற ஒரு கோடி ரூபாய் சம்பளம் பெரும் முதல் தமிழ் நடிகை - செம்ம அப்டேட்..! Reviewed by Tamizhakam on September 05, 2020 Rating: 5
Powered by Blogger.