முன்னணி நடிகைகள் நடிக்க தயங்கிய கதாபாத்திரம் - தில்லாக ஒப்புக்கொண்ட சமந்தா..!


மாயா மற்றும் கேம் ஓவர் படங்களை இயக்கிய அஸ்வின் சரவணன் இயக்கும் அடுத்த படத்தில் நாயகியாக நடித்து வருகிறார் சமந்தா. விறுவிறுப்பாக நடந்து வந்த படப்பிடிப்பு கொரோனாவால் இடையில் சில மாதங்கள் நிறுத்தப்பட்டது. 
 
தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் மீண்டும் படப்பிடிப்பை தொடங்க படக்குழு திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. பொதுவாகவே நடிகைகள் பலரும் நடிக்க தயங்கும் கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார் சமந்தா.
 
பல முன்னணி நடிகைகளை அணுகிய போது அனைவரும் மறுத்துவிட்ட கதாபாத்திரத்தில் தில்லாக நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார் சமந்தா. ஆம், படத்தில் சமந்தா மாற்றுத்திறனாளியாக நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
நானும் ரௌடிதான் படத்தில் நயன்தாரா நடித்தது மாதிரி காது கேட்காத மாற்றுத்திறனாளியாக சமந்தா இப்படத்தில் நடிக்கிறாராம். இதற்காக ஆன்லைன் மூலம் அவர் பயிற்சி எடுத்ததாகவும் கூறப்படுகிறது. 
 
தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் இப்படத்தை சோனி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும், இந்த படத்திற்காக ராமோஜிராஜ் பிலிம் சிட்டியில் பிரமாண்ட செட் போடப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

முன்னணி நடிகைகள் நடிக்க தயங்கிய கதாபாத்திரம் - தில்லாக ஒப்புக்கொண்ட சமந்தா..! முன்னணி நடிகைகள் நடிக்க தயங்கிய கதாபாத்திரம் - தில்லாக ஒப்புக்கொண்ட சமந்தா..! Reviewed by Tamizhakam on September 20, 2020 Rating: 5
Powered by Blogger.