"என்ன பப்பு சஸ்பென்சை ஒடச்சிட்டியே.." - ஆல்யா மானசா வெளியிட்ட புகைப்படம் - ஷாக் ஆன கணவர் சஞ்சீவ்..!

 
முந்தைய காலங்களில் சில சீரியல்கள் நடித்த பின் ஒரு நடிகர் மக்களிடம் பிரபலமாவார். ஆனால் இப்போது அப்படி இல்லை, ஒரு சீரியல் நடித்தாலே அவர் மக்களிடம் பெரிய அளவில் ரீச் ஆகிவிடுகிறார். 
 
அப்படி ஒரு நடன நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பின் அப்படியே சீரியல் பக்கம் வந்தவர் ஆல்யா மானசா. ராஜா ராணி என்ற சீரியலில் நடித்து பின் அந்த சீரியலின் நாயகனையே காதலித்து திருமணமும் செய்து கொண்டார். இருவருக்கும் அண்மையில் தான் பெண் குழந்தை பிறந்தது. 
 
குழந்தைக்கு "ஜலா சையது" என்றும் அவர்கள் பெயரிட்டுள்ளனர். சஞ்சீவ் சீரியல்கள் நடிக்க ஆரம்பித்துவிட்டார் ஆல்யா மானசா மட்டும் எந்த வேலையும் தொடங்காமல் இருந்தார்.சஞ்சீவ் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மௌனராகம் தொடரில் நடித்து வருகிறார். 
 
ஆல்யா மானசா விஜய் டிவியின் பிரபல கேம் ஷோ ஒன்றில் நடுவராக இருந்து வந்தார்.கடந்த சில வருடங்களாக காதல் ஜோடியாக இருந்து வந்த இவர்கள் அடிக்கடி அவுட்டிங் செல்வது , இருவரும் சேர்ந்து பேட்டி கொடுப்பது என இருந்துவந்த நிலையில் சமீபத்தில் யாருக்கும் சொல்லாமல் ரகசியமாக திருமணம் செய்துகொண்டு மணவாழ்க்கையை மகிழ்ச்சியுடன் துவங்கினர். 

 
இந்நிலையில் தற்போது குழந்தை பிறப்பிற்கு பிறகு மீண்டும் ராஜா ராணி 2 சீரியலில் நடித்து வருகிறார்.இதனை தொடர்ந்து இப்போது ஆல்யா மானசாவும் புதிய சீரியல் ஒன்றில் நடிக்கவுள்ளார்.


இந்த சீரியலில் நடந்த டெஸ்ட் ஷூட்டிங்கின் புகைப்படத்தை வெளியிட்துள்ளார். இதனை பார்த்த அவரது கணவர் சஞ்சீவ். என்ன பப்பு சஸ்பென்சை ஒடச்சிட்டியே என்று கமென்ட் செய்துள்ளார்.

"என்ன பப்பு சஸ்பென்சை ஒடச்சிட்டியே.." - ஆல்யா மானசா வெளியிட்ட புகைப்படம் - ஷாக் ஆன கணவர் சஞ்சீவ்..! "என்ன பப்பு சஸ்பென்சை ஒடச்சிட்டியே.." - ஆல்யா மானசா வெளியிட்ட புகைப்படம் - ஷாக் ஆன கணவர் சஞ்சீவ்..! Reviewed by Tamizhakam on September 22, 2020 Rating: 5
Powered by Blogger.