பட வாய்ப்புக்காக இப்படியுமா..? - இதுவரை இல்லாத உச்ச கட்ட கவர்ச்சியில் இளம் நடிகை கயல் ஆனந்தி..!


இயக்குனர் பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியான ‘கயல்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஆனந்தி. தொடர்ந்து ‘பொறியாளன்’, ‘சண்டி வீரன்’, ‘த்ரிஷா இல்லேனா நயன்தாரா’, ‘விசாரணை’, ‘பரியேறும் பெருமாள்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். 
 
தற்போது ஆனந்தி நடிப்பில் ‘அலாவுதீனின் அற்புத கேமரா’, ‘எங்கே அந்த வான்’, ‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’ ஆகிய படங்கள் ரிலீஸுக்குத் தயாராகி வருகின்றன. விக்ரம் சுகுமாறன் இயக்கத்தில் சாந்தனுவுடன் ஆனந்தி நடிக்கும் படப்பிடிப்பும் நடைபெற்று வருகிறது. 
 
எனக்கு கவர்ச்சி ஒத்துவராது. என்னுடைய உடல்வாகு அப்படி. ஆனால்,நான் ஒப்பந்தமாகும் படங்களில் கவர்ச்சியாக நடிக்கும்படி கேட்கிறார்கள். கதை சொல்லும் போது எதுவும் சொல்லாமல் படப்பிடிப்பு நடக்கும் போது சொல்கிறார்கள். அதனால்,நான் கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் என்று கூறி வந்தார் அம்மணி. 
 
ஆனால் திரிஷா இல்லனா நயன்தாரா படத்தின் மூலம் மக்களின் வெறுப்பை பெற்றார். தன்னை கவர்ச்சியாக நடிக்கும்படி இயக்குநர்கள் நிர்ப்பந்தித்ததாக குற்றம் சாட்டியுள்ளார் நடிகை ஆனந்தி. இது குறித்து அவர் நாளிதழ் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில், ‘‘பள்ளியில் படித்துக்கொண்டு இருந்தபோது நடிகையாக வேண்டும் என்று ஆர்வம் இல்லை. எதிர்பாராமல் நடிகையாகி விட்டேன்.
 
கயல் படத்தில் டைரக்டர் பிரபு சாலமன் என்னை நடிக்க வைத்து பிரபலபடுத்தினார். அவர்தான் எனக்கு நடிப்பு சொல்லிக் கொடுத்தார். ஏற்கனவே நான் நடித்த சில படங்களில் எனக்கு அசவுகரியங்கள் ஏற்பட்டன. டைரக்டர் ஆரம்பத்தில் என்னிடம் கதை சொன்னதை மீறி படப்பிடிப்பில் கவர்ச்சியாக நடிக்கும்படி வற்புறுத்தப்பட்டேன்.
 
அரைகுறை ஆடையை கொடுத்தும் உடுத்த சொன்னார்கள். என் உடல்வாகுக்கு கவர்ச்சி எடுபடாது. கவர்ச்சியாக நடிப்பது இல்லை என்று சினிமாவில் அறிமுகமானபோதே முடிவும் செய்து விட்டேன் ஏறனு கூறினார்.
 
கடந்த சில ஆண்டுகளாக தெலுங்கு படங்களில் நடிக்காமல் இருந்தார். ஆனால், தற்போது, பட வாய்ப்புக்காக கவர்ச்சி களமிறங்க தயாராகி விட்டார் என்று கூறுகிறார். இவர் பிரபல நடிகர் நடிக்கும் தெலுங்கு படம் ஒன்றில் இதுவரை இல்லாத கவர்ச்சி காட்சிகளில் நடிக்கவுள்ளார் என்று கூறுகிறார்கள். 
 
இதனை அறிந்த ரசிகர்கள் படவாய்ப்புக்காக இப்படியுமா..? என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள. தற்போது, தமிழில் ராவண கூட்டம் என்ற படத்திலும் ஹீரோயினாக நடித்து வருகிறார் கயல்ஆனந்தி என்பது குறிப்பிட தக்கது.

பட வாய்ப்புக்காக இப்படியுமா..? - இதுவரை இல்லாத உச்ச கட்ட கவர்ச்சியில் இளம் நடிகை கயல் ஆனந்தி..! பட வாய்ப்புக்காக இப்படியுமா..? - இதுவரை இல்லாத உச்ச கட்ட கவர்ச்சியில் இளம் நடிகை கயல் ஆனந்தி..! Reviewed by Tamizhakam on September 05, 2020 Rating: 5
Powered by Blogger.