சிவாஜி - அங்கவை, சங்கவை சகோதரிகள் இப்போ எப்படி இருக்காங்க பாத்தீங்கனா தூக்கி வாரி போட்ரும்..! - வைரல் போட்டோ..!
ஒரு டஜன் படங்களில் நடித்தாலும் முகம் தெரியாமல் இருக்கும் நடிகர்கள் பலர் உள்ளனர். ஆனால், சில நடிகர்கள் ஒரே ஒரு படத்தில் ஒரே ஒரு காட்சியில் தோன்றி மறைந்து பிரபலமாகி விடுவார்கள்.
அந்த வகையில், சிவாஜி படத்தில் சாலமன் பாப்பையாவின் மகள்களாக அங்கவை, சங்கவை என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர்கள் தான் இந்த சகோதரிகள்.
நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் நடிப்பில் இயக்குனர் ஷங்கர் கூட்டணியில் மாபெரும் வெற்றியைப் பெற்ற படம் தான் சிவாஜி. இந்தப் படத்தில் பேர கேட்டா சும்மா அதிருத்துல இந்த வசனத்தை ரஜினி உச்சரிக்கும் ஒவ்வொரு தடவையும் விழும் கைத்தட்டல்கள் காது கிழியும் அளவிற்கு இருக்கும்.
இன்னும் ரஜினியின் பட வரிசையில் சிவாஜியை மிஞ்ச எந்திரனை தவிர வேற எந்த படமும் இதுவரை வரவில்லை என்பது தான் உண்மை. சிவாஜி படம் அந்த நேரத்தில் பாக்ஸ் ஆபீஸில் பெரிய கலெக்சன் செய்தது. அப்படிப்பட்ட மாபெரும் ஹிட் படத்தில் ஒரு நகைச்சுவை காட்சி இடம் பெற்றிருக்கும்.
தீபாவளியன்று ரஜினி அவர்கள் தனது குடும்பத்துடன் ஸ்ரேயாவின் வீட்டுக்கு செல்வார்கள். அங்கு அவரது அப்பா பட்டிமன்ற பேச்சாளர் ராஜா அவர்கள் ரஜினியை அவரது வீட்டுக்குள் நுழைய விடாமல் வெளியே நிற்க வைப்பார். அதற்கு எதிர்வீட்டில் வசித்துவரும் சாலமன் பாப்பையா ரஜினியிடம் அவன் கிடக்கிறான் வாங்க எங்கிட்ட ரெண்டு பொண்ணு இருக்கு நல்லா பழகுங்க என்று கூறுவார்.
அப்போது அவருடைய பெண்களை ரஜினிக்கு அறிமுகம் செய்து வைப்பார் இது அங்கவை அது சங்கவை என்று பெண்களுக்கு பெயர் வைத்திருப்பார். இந்த நகைச்சுவைக் காட்சிகள் அனைவரும் ரசிக்கும் படியாக இருந்தது.
படம் வெளியாகி 13 வருடங்களுக்கு பிறகு அங்கவை சங்கவை ஆக நடித்த அந்த பெண்களின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது இது அந்த புகைப்படங்கள்.
சிவாஜி - அங்கவை, சங்கவை சகோதரிகள் இப்போ எப்படி இருக்காங்க பாத்தீங்கனா தூக்கி வாரி போட்ரும்..! - வைரல் போட்டோ..!
Reviewed by Tamizhakam
on
September 29, 2020
Rating:
