"மூடிய கதவின் பின்னால்...." - தனக்கு நேர்ந்த மோசமான அனுபவம் குறித்து ஓப்பனாக கூறிய கஸ்தூரி..!


ஆத்தா உன் கோயிலிலே, ஆத்மா, அமைதிப்படை, இந்தியன், தூங்கா நகரம், தமிழ்படம் உட்பட ஏராளமான படங்களில் நடித்தவர் நடிகை கஸ்தூரி. இவர் தமிழ் மட்டுமின்றி ஹிந்தி, கன்னடம், மலையாளம், மற்றும் தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்துள்ளார். 
 
நடுவில் கொஞ்சம் இடைவெளி எடுத்துகொண்டு 2009 ஆம் ஆண்டில் அருண்விஜய் நடிப்பில் வெளியான மலை மலை படத்தின் மூலம் ரீ-என்ட்ரி ஆனார். தற்போது கூட படங்களில் நடித்து வரும் இவர், சமூகத்தில் நடக்கும் பிரச்சனைகள் மற்றும் அரசியல் குறித்து, இவரின் சமூக வலைதள பக்கத்தில் தனது கருத்தை தெரிவிப்பதன் மூலம் இன்னும் பல மக்கள் மத்தியில் பிரபலம் ஆகி வருகிறார். 
 
இந்நிலையில் பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் மீது பாலியல் புகார் கூறப்பட்ட நிலையில், நடிகை கஸ்தூரி தனது ட்விட்டர் பக்கத்தில், ”எந்தவித ஆதாரமும் இன்றி, ஒருவர் மீது பாலியல் ரீதியான குற்றச்சாட்டை முன் வைப்பது சட்டப்படி ஏற்புடையது அல்ல” என #behindcloseddorrs என்ற டேக்கில் பதிவிட்டார். 
 
இதையடுத்து நெட்டிசன் ஒருவர், ”உங்களுக்கு நெருக்கமானவருக்கு இது போல நடந்தாலும், இப்படிதான் சட்டம் பேசுவீர்களா..?”‘ என கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த கஸ்தூரி, ”நெருக்கமானவர் என்ன.?, எனக்கே இது நடந்திருக்கிறது. 
 
இது இப்படிதான் இருக்கிறது. பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானவர்கள் மீது எனக்கு இரக்கம் உள்ளது. ஆனால், எனது தனிப்பட்ட பார்வை சட்டமாகாது. சட்டம் உருவாக்கப்பட்டதன் காரணமே, போலியான புகார்களை புறந்தள்ளி, ஆதாரத்தை நோக்குவதே” என அவர் பதிவிட்டுள்ளார். 
 
தனக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல் குறித்து இவர் இப்படிக் கூறியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

"மூடிய கதவின் பின்னால்...." - தனக்கு நேர்ந்த மோசமான அனுபவம் குறித்து ஓப்பனாக கூறிய கஸ்தூரி..! "மூடிய கதவின் பின்னால்...." - தனக்கு நேர்ந்த மோசமான அனுபவம் குறித்து ஓப்பனாக கூறிய கஸ்தூரி..! Reviewed by Tamizhakam on September 22, 2020 Rating: 5
Powered by Blogger.