சரி.. CSK-க்கே சப்போர்ட் பண்ணுவோம் - ஆத்மிகா வெளியிட்ட புகைப்படம் - கதறிய MI ஃபேன்ஸ்..!

 
மீசைய முறுக்கு படம் மூலம் திரையுலகில் அறிமுகமான நடிகை ஆத்மிகாவின் சமீபத்திய கவர்ச்சி புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
 
ஹிப்ஹாப் ஆதி இயக்கி நடித்த ‘மீசைய முறுக்கு’ படம் மூலம் நடிகை ஆத்மிகா திரையுலகில் அறிமுகமானார். இப்படம் ஹிட்டானதை தொடர்ந்து, இவருக்கு துருவங்கள் பதினாறு பட இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கும் நரகாசூரன் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. 
 
இதேபோல் வைபவ் நடிப்பில் உருவாகும் காட்டேரி படத்திலும் ஆத்மிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த இரண்டு படங்களும் விரைவில் ரிலீசாக உள்ளன. 
 
கொரோனா ஊரடங்கால் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டதால், வீட்டிலேயே முடங்கி இருக்கும் ஆத்மிகா, சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கிறார். அவ்வப்போது போட்டோஷூட் நடத்தி, அந்த புகைப்படங்களை பதிவேற்றி வருகிறார். 
 
அந்தவகையில், நேற்று தொடங்கிய IPL போட்டியில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியை ஆதரிக்கும் விதமாக மஞ்சள் நிற ஜெர்ஸி உடையில் கவர்ச்சியாக போட்டோஷூட் நடத்தியுள்ள ஆத்மிகா, அந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். 

 
இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. ஆத்மிகாவின் இந்த புகைப்படங்களுக்கு லைக்ஸ் குவிந்து வருவதோடு, டுவிட்டரிலும் டிரெண்டாகி வருகின்றது. இந்த புகைப்படங்களை பார்த்த MI ரசிகர்கள் சரி, CSK-க்கு சப்போர்ட் பண்ணுவோம் என்று கதறி வருகிறார்கள்.

சரி.. CSK-க்கே சப்போர்ட் பண்ணுவோம் - ஆத்மிகா வெளியிட்ட புகைப்படம் - கதறிய MI ஃபேன்ஸ்..! சரி.. CSK-க்கே சப்போர்ட் பண்ணுவோம் - ஆத்மிகா வெளியிட்ட புகைப்படம் - கதறிய MI ஃபேன்ஸ்..! Reviewed by Tamizhakam on September 19, 2020 Rating: 5
Powered by Blogger.