"ஒருவேளை அந்த எண்ணம் ஏற்படாமல் இருந்தால் தற்கொலை செய்திருப்பேன்.." - அலெக்ஸ் பாண்டியன் பட நடிகை பகீர்..!


லாக்டவுன் சமயத்தில் கடும் மனச்சோர்வு ஏற்பட்டு நான் தற்கொலை செய்யக் கூட தீர்மானித்தேன். ஆனால் நான் அந்த முடிவிலிருந்து பின் வாங்குவதற்கு என் தம்பி மட்டும் தான் காரணம் என்று கூறுகிறார் பிரபல மலையாள நடிகை சனுஷா.
 
கொரோனா லாக்டவுனால் மன நிம்மதி இழந்தவர்கள் ஏராளம். வேலை பறிபோனதாலும், சம்பளம் அதிரடியாகக் குறைக்கப்பட்டதாலும் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதாலும் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 
 
கோடிகளில் சம்பாதிக்கும் முன்னணி நடிகர் நடிகைகளுக்கு கவலையே இல்லை. அவர்களுக்கு வங்கி மூலம் வரும் வட்டி பணம் மட்டுமே லட்சங்களிலும், கோடிகளிலும் இருக்கும். ஆனால், சிறிய நடிகர், நடிகைகள், துணை நடிகைகள், குரூப் டான்சர்கள் முதல் லைட் மென் வரை கடுமையான பொருளாதார சிக்கலில் சிக்கி உள்ளனர். 
 
மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் சனுஷா. தமிழில் ரேணிகுண்டா படத்தில் ஹீரோயினாக அறிமுகமானவர் நாளை நமதே, எத்தன், அலெக்ஸ் பாண்டியன், கொடி வீரன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். 
 
மருமகன் என்ற படத்தின் மூலம் மலையாளத்தில் ஹீரோயினாக அறிமுகமாகி அங்கும் ஏராளமான படங்களில் நடித்தார். கொரோனா காலத்தில் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்ததாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டிருக்கிறார் சனுஷா. 
 
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் பேசியிருப்பதாவது, கொரோனாவால் என் வாழ்க்கையிலும், தொழிலிலும் மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டது. எதிர்மறை எண்ணங்கள் தோன்றி என்னை பயமுறுத்தியது. மன அழுத்த பிரச்சினையால் தவித்தேன். 
 
எனக்கு பெரியதாக நண்பர்கள் வட்டம் இல்லை. உறவினர்களும் அருகில் இல்லை. இதனால் என் பிரச்சினைகளை யாரிடம் பகிர்ந்து கொள்வது என்றுகூட தெரியவில்லை. தற்கொலை செய்து கொள்ளலாம் என்று முடிவு செய்தேன். 
 
ஆனால் என்னையே நம்பி இருக்கும் என் தம்பி, என் மரணத்திற்கு பிறகு என்ன ஆவான் என்று நினைத்துப் பார்த்து அந்த எண்ணத்தை கைவிட்டேன். ஒருவேளை அந்த எண்ணம் எனக்கு ஏற்பட வில்லையென்றால் நான் தற்கொலை செய்திருப்பேன். சில நண்பர்களின் ஆலோசனைப்படி மனநல மருத்துவர்களை சந்தித்தேன். அவர்களின் வழிகாட்டுதல்படி தற்போது மீண்டு வந்திருக்கிறேன். 
 
மன அழுத்தம் சதாரண பிரச்னை இல்லை. அதை கண்டுகொள்ளாவிட்டால் அது விபரீத விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை மற்றவர்களுக்கு சொல்வதற்காகத்தான் இந்த வீடியோவை வெளியிட்டிருக்கிறேன். என்று பேசி இருக்கிறார்.

"ஒருவேளை அந்த எண்ணம் ஏற்படாமல் இருந்தால் தற்கொலை செய்திருப்பேன்.." - அலெக்ஸ் பாண்டியன் பட நடிகை பகீர்..! "ஒருவேளை அந்த எண்ணம் ஏற்படாமல் இருந்தால் தற்கொலை செய்திருப்பேன்.." - அலெக்ஸ் பாண்டியன் பட நடிகை பகீர்..! Reviewed by Tamizhakam on October 17, 2020 Rating: 5
Powered by Blogger.